OTT: கொஞ்சம் திகில் நிறைய காமெடி.. ஓடிடி-யில் பார்க்கவேண்டிய சூப்பர் ஹிட் ஹாரர் திரைப்படங்களின் லிஸ்ட்!
காமெடி படம் யாருக்கு தான் பிடிக்காது, அதிலும் கொஞ்சம் திகில் கலந்திருந்தாலும் படம் சூப்பர் ஹிட் என்றே சொல்லலாம். அந்த வகையில் தமிழில் வெளியான சூப்பர் ஹிட் காமெடி ஹாரர் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2017ல் ஜவஹர் இயக்கத்தில் வெளியான காமெடி ஹாரர் திரைப்படம் 'பயமா இருக்கு'. கோவை சரளா, சந்தோஷ் பிரதாப், மொட்டை ரஞ்செந்திரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்த சூப்பர் ஹிட் காமெடி திகில் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஜீ5 ஓடிடியில் காணலாம்.
சந்தானம் நடிப்பில் 2016ல் வெளியான காமெடி திகில் திரைப்படம் 'தில்லுக்கு துட்டு'. சந்தானம், மொட்டை ரஞ்செந்திரன், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் காணலாம்.
ஜீவா, ஸ்ரீ திவ்யா, சூரி உள்ளிட்டோர் நடிப்பில் 2017ல் வெளியான காமெடி ஹாரர் திரைப்படம் 'சங்கிலி புங்கிலி கதவதொற'. இப்படத்தை ஜியோஹாட்ஸ்டார் தளத்தில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
காஜல் அகர்வால், மதன் பாபு, யோகி பாபு உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கோஷ்டி'. இப்படத்தை ஜீ5 ஓடிடி பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சதீஷ், ரெஜீனா, நாசர், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான திகில் காமெடி திரைப்படம் 'கான்ஜுரிங் கண்ணப்பன்'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
சந்தானம் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் காமெடி த்ரில் திரைப்படம் 'டிடி ரிட்டர்ன்ஸ்'. இந்த அசத்தலான காமெடி திகில் திரைப்படத்தை ஜியோஹாட்ஸ்டார், அமேசான் பிரைம் மற்றும் ஜீ5 தளத்தில் காணலாம்.


Click it and Unblock the Notifications