OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. என்னென்ன தென்னிந்திய திரைப்படங்கள் பார்க்கலாம்? முழு லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடி தளங்களில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாளத்தில் வெளிவந்த சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Sambhavam Adhyayam Onnu'. திகில் நிறைந்த இப்படம் நேற்று 15ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது. தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழியிலும் ரிலீஸாகியுள்ளது.
கென் கருணாஸ் இயக்கி, நடித்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'யூத்'. இப்படம் பெரும் எதிர்பார்ப்புடன் இன்று 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
பவன் கல்யாண் நடிப்பில் தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி திரைப்படம் 'Ustaad Bhagat Singh'. இப்படம் இன்று 16ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Aa Gang Repu 3'. கூட்டு பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படமாகும். இப்படம் இன்று 16ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடி தளத்தில் ரிலீஸாகியுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள மிஸ்ட்ரி, திரில்லர் வெப் தொடர் 'Pochamma'. த்ரில் நிறைந்த இத்தொடர் நாளை 17ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ் மொழியிலும் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் உருவாகியுள்ள ஃபேமிலி ட்ராமா வெப் தொடர் 'Maa Inti Katha'. இத்தொடர் நாளை 17ம் தேதி ETvWin ஓடிடி தளத்தில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications