OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. தென்னிந்திய திரைப்படங்களின் சூப்பர் லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் உருவாகியுள்ள காமெடி ரொமான்டிக் வெப் தொடர் 'Batchmates'. இத்தொடர் இன்று 30ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீஸாகியுள்ளது.
அட்வென்ச்சர், ஃபீல் குட் வெப் தொடர் SoulTrip. இத்தொடரின் இரண்டாவது எபிசோட் இன்று 30ம் தேதி ETvWin ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த ஆக்ஷன் ஃபேமிலி ட்ராமா திரைப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. இப்படம், நாளை மே 1ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த பைக் ரேஸ் திரைப்படம் 'Biker'. இப்படம், நாளை மே 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் கடந்தாண்டு வெளிவந்த கலக்கலான காமெடி திரைப்படம் 'Sodara'. இப்படம், நாளை மே 1ம் தேதி ஆஹா வீடியோ ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த காமெடி, ஃபேண்டஸி திரைப்படம் 'Raakaasa'. கலக்கலான இப்படம் நாளை மே 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த ஆக்ஷன், காமெடி, ஃபேண்டஸி திரைப்படம் 'Aadu 3'. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், நாளை மே 1ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் ரிலீசாகவுள்ளது.
உமாபதி ராமையா இயக்கத்தில் நட்ராஜ், தம்பி ராமையா, சாந்தினி தமிழரசன், யாஷிகா, எம்எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'TN 2026'. இப்படம் இன்று 30ம் தேதி அமேசான் பிரைம், ஆஹா தமிழ் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.


Click it and Unblock the Notifications