OTT: இந்த வார ஓடிடி ரிலீஸ்.. பார்க்கவேண்டிய தென்னிந்திய திரைப்படங்கள் என்னென்ன? லிஸ்ட்!
இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவுள்ள தென்னிந்திய திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கன்னடத்தில் வெளிவந்த காமெடி, திரில்லர் திரைப்படம் 'Super Hit'. கலக்கலான இப்படம் நாளை 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கன்னடத்தில் வெளிவந்த ரொமான்டிக் ட்ராமா திரைப்படம் 'Love Mocktail 3'. இப்படம் நாளை 8ம் தேதி ஜீ5 ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
கலக்கலான காமெடி, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த மலையாள திரைப்படம் 'Bharathanyam 2 Mohiniyattam'. இப்படம் நாளை 8ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
மலையாளத்தில் வெளிவந்த 'வாழை 1' மாபெரும் வெற்றிபெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகமாக வாழை 2 ரிலீசாகி அமோக வரவேற்பு பெற்றது. கலக்கலான இந்த ஃபீல் குட், காமெடி திரைப்படம் நாளை 8ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளிவந்த 'எல்ஐகே' திரைப்படம் நேற்று 6ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது.
மிஸ்ட்ரி, தரல்லர் கதைக்களத்தில் வெளிவந்த தமிழ் திரைப்படம் 'Oh Butterfly'. இப்படம் நாளை 8ம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
பேட்ரிக் ஜான், அயரா பாலக், சாந்தினி தமிழரசன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த ஹாரர், சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் 'Satan: The Dark'. இப்படம் நாளை 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.
தெலுங்கு வெளிவந்த ஆக்ஷன், ரொமான்ஸ், திரில்லர் திரைப்படம் 'Dacoit: A Love Story'. இப்படம் நாளை 8ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது. தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications