Home / Photos
வாணவேடிக்கைகளுடன் நிறைவடைந்தது பாரிஸ் ஒலிம்பிக்.. பைக் சாகசம் நடத்திய டாம் குரூஸ்.. போட்டோஸ்!
By Chandru
பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. 17 நாட்கள் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்று வண்ணமயமான நிகழ்ச்சிகளுடன் நிறைவுபெற்றது. தற்போது இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.
1/10
Photo Credit: pti
Share
பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் 33வது ஒலிம்பிக் போட்டி கடந்த ஜூலை 26ம் தேதி கோலாகலமாக தொடங்கியது. பாரிஸில் உள்ள சென் நதியில் படகு அணிவகுப்புடன் பிரமாண்டமாக ஒலிம்பிக் துவக்க விழா நடைபெற்றது.
2/10
Photo Credit: pti
Share
ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளை சேர்த்த 10,714 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
3/10
Photo Credit: pti
Share
ஈட்டி எறிதல் போட்டியில் ஒரு வெள்ளி, துப்பாக்கி சுடுதல் போட்டியில் 3 வெண்கலம் மற்றும் மல்யுத்தம், ஹாக்கி போட்டியில் தலா ஒரு வெண்கலப் பதக்கம் வென்று ஒலிம்பிக் பதக்க பட்டியலில் 71 இடத்தை இந்தியா பிடித்துள்ளது.
4/10
Photo Credit: pti
Share
மேலும் பதக்க பட்டியலில் அமெரிக்கா 126 பதக்கங்களுடன் முதல் இடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், ஜப்பான் மூன்றாம் இடத்திலும், ஆஸ்திரியா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற பாகிஸ்தான் 62வது இடத்தை பிடித்துள்ளது.
5/10
Photo Credit: pti
Share
ஒலிம்பிக் போட்டியில் இந்தியா மூன்றாவது முறையாக 71வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் அட்லாண்டா மற்றும் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 71வது இடத்தை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
6/10
Photo Credit: pti
Share
17 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற ஒலிம்பிக் போட்டி நேற்று முடிவுக்கு வந்தது. துவக்க விழா பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில் நிறைவு விழாவும் கோலாகலமாக நடந்துமுடிந்துள்ளது.
7/10
Photo Credit: pti
Share
நிறைவுவிழாவில், ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் பைக் சாகசம் செய்து பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
8/10
Photo Credit: pti
Share
மேலும் அமெரிக்காவின் ரேப் பாடகர் ஸ்னுாப் டாக், பாடகி பில்லி எய்லிஷ் உள்ளிட்ட உலகின் டாப் பாடகர்கள் ஒலிம்பிக் நிறைவு விழாவில் இசை கச்சேரி நடத்தி அசத்தினர்.
9/10
Photo Credit: pti
Share
ஒலிம்பிக் ஸ்டேடியதின் உச்சியில் டாம் குரூஸ் பயமின்றி நிற்கும் காட்சி.


Click it and Unblock the Notifications