தமிழ்நாட்டில் பிற மொழி பேசுபவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் தெரியுமா? யார் அதிகம்? சுவாரசிய லிஸ்ட்!
பன்முக கலாச்சாரம் கொண்ட நாடு இந்தியா. ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கலாச்சாரம், மொழியை நாம் காணலாம். அந்த வகையில் தமிழ்நாட்டில் பிற மொழி பேசுபவர்கள் எத்தனை சதவீதம் உள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழ்நாட்டில் 89 சதவீத மக்கள் தமிழ் மொழி பேசுவதாக கூறப்படுகிறது. மீதமுள்ளவர்கள் பிற மொழிகளை பேசுகின்றனர்.
தமிழ் மொழியை தொடர்ந்து தெலுங்கு மொழி தமிழ்நாட்டில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. சுமார் 5-6 சதவீத மக்கள் தெலுங்கு மொழி பேசுவதாக கூறப்படுகிறது.
மூன்றாவது அதிகம் பேசப்படும் பிற மொழியாக கன்னடம் உள்ளது. சுமார் 1.5-2 சதவீத மக்கள் கன்னட மொழி பேசுவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் அதிகம் பேசப்படும் பிற மொழிகளில் உருது 4ம் இடத்தை பிடித்துள்ளது. சுமார் 1.5-2 சதவீத மக்கள் உருது மொழி பேசுவதாக கூறப்படுகிறது.
இறுதியாக, மலையாள மொழி 5ம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு சதவீத மக்கள் மலையாள மொழி பேசுவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications