ஓடிடியில் வெளியான சூப்பர் ஹிட் காமெடி, ஹாரர் திரைப்படம்.. என்ன படம்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்?
காமெடி கலந்த ஹாரர் திரைப்படங்களுக்கு என்றுமே தனி மவுசு தான். அப்படியாக உருவான தெலுங்கு படம் ஒன்று தியேட்டரில் ரிலீசாகி பிளாக்பாஸ்டர் ஹிட்டானது. அந்த என்ன? எந்த ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது? என்பதை நாம் இந்த பதிவில் பார்ப்போம்.
கலக்கலான காமெடி கலந்த திகில் நிறைந்த ஹாரர் படங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பு கொடுத்து வருகின்றனர். தயாரிப்பாளருக்கு வணிக ரீதியாக நல்ல லாபத்தை கொடுப்பதால் பெரும்பாலான தயாரிப்பாளர்கள் இம்மாதிரியான ஜானரில் படத்தை உருவாக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதன்படி தமிழ் சினிமாவில் எத்தனையோ காமெடி ஹாரர் படங்கள் ரிலீசாகி வெற்றி கண்டு வருகிறது. இந்த ஃபார்முலாவை பிற மொழி தயாரிப்பாளர்களும், இயக்குநர்களும் பின்தொடர ஆரம்பித்துள்ளனர்.
ராகாசா: அதன்படி தெலுங்கில் உருவான காமெடி ஹாரர் திரைப்படம் 'ராகாசா' (Raakaasa). மானசா சர்மா இயக்கத்தில் உருவான இப்படம் கடந்த ஏப்ரல் மாதம் 3ம் தேதி தியேட்டரில் ரிலீசானது.
படக்குழு: அப்படத்தில் சங்கீத் சோபன், நயன் சரிகா, வெண்ணெலா கிஷோர், கெட்டப் சீனு, பிரம்மாஜி, ரோகினி உள்ளிட்டோர் காமெடி ஹாரர் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.
கதை சுருக்கம்: வெளிநாட்டில் இருந்து சொந்த ஊருக்கு வரும் இளைஞர் ஒருவர், பாழடைந்த பங்களாவில் அடைபட்டிருந்த அமானுஷ்ய சக்திகளை தட்டியெழுப்பிவிடுகிறார். அதன்பின்னர் என்ன ஆனது என்பதே இப்படத்தின் காமெடி கலந்த திரில்லர் கதைக்களம்.
ஹிட்: எதிர்பார்ப்புடன் தியேட்டரில் ரிலீசான இப்படம், வசூலிலும் விமர்சனத்திலும் நல்ல வரவேற்பு பெற்றது. சூப்பர் டூப்பர் ஹிட்டான இப்படம் எப்போது ஓடிடியில் ரிலீசாகும் என ஓடிடி பிரியர்கள் செம வைட்டிங்கில் இருந்தனர்.
ஓடிடி? அந்த வகையில் ராகாசா திரைப்படம் இன்று மே 1ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியானது. தெலுங்கில் உருவான இப்படம், தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளும் வெளியாகியுள்ளது. இந்த வீக் எண்டு இப்படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications