ரூ.500 கோடிக்கும் அதிகமான சொத்து.. இந்தியாவின் கோடீஸ்வர நடிகைகள்.. லிஸ்ட்!
இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியலில் 5ம் இடத்தில் தீபிகா படுகோன் உள்ளார். இந்தியளவில் மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை கொண்டுள்ள தீபிகாவின் சொத்து மதிப்பு சுமார் 400-500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
பாலிவுட் நடிகையான ஆலியா பட், அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். ஸ்டார் நடிகையான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 550 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியலில் 3ம் இடத்தில் பிரியங்கா சோப்ரா உள்ளார். இந்திய சினிமா மட்டுமல்லாமல் ஹாலிவுட் சினிமாவிலும் கலக்கிக்கொண்டிருக்கும் பிரியங்காவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இந்தியாவின் கோடீஸ்வர நடிகையாகவும், 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியலில் ஐஸ்வர்யா ராய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். ஐஸ்வர்யாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 800-900 கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
இறுதியாக, இந்தியாவில் 500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியலில் முதல் இடத்தில நடிகை ஜூஹி சாவ்லா உள்ளார். நடிகையாகவும் மட்டுமல்லாமல் பல துறைகளில் முதலீடு செய்து கோடிகளில் லாபம் ஈட்டி வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7,790 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications