Home / Photos
துபாயில் ஜாலி பண்ணும் பாரதி கண்ணம்மா சீரியல் வில்லி.. கிளாமர் உடையில் வேற லெவல் போட்டோஷூட்!
By Chandru
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி ஃபரீனா ஆசாத்தின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் இணையத்தளத்தில் செம்ம வைரலாகி வருகிறது.
1/9
Photo Credit: instagram
Share
பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகை ஃபரீனா ஆசாத். தற்போது இவர் துபாயில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்து ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.
2/9
Photo Credit: instagram
Share
வெள்ளைத்திரையை போலவே சின்னத்திரையிலும் வில்லன் கதாபாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இன்னும் சொல்லப்போனால் சீரியல்களில் வில்லன் கதாபாத்திரம் இல்லை என்றால் அது சீரியலே இல்லை என்று சொல்லலாம், கதை நகர்வதற்கு வில்லன் கதாபாத்திரம் அவசியம்.
3/9
Photo Credit: instagram
Share
அதன்படி ஒவ்வொரு சீரியல்களிலும் வித்தியாசமான ரோலில் வில்லன் கதாபாத்திரம் சித்தரிக்கப்படும். இந்த கேரக்டர் மக்களின் கவனத்தை அதிகம் ஈர்க்கும் என்றாலும் சில நேரங்களில் ஹீரோ, ஹீரோயின் கதாபாத்திரத்தையே பின்னுக்கு தள்ளும் அளவுக்கு வில்லன் கதாபாத்திரமும், அதில் நடிக்கும் நடிகர்களின் நடிப்பும் மக்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும்.
4/9
Photo Credit: instagram
Share
அந்தவகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா சீரியல் இன்றும் பலரின் ஃபேவரைட் சீரியல்களில் ஒன்றாக இருந்து வருகிறது. நெடுந்தொடராக ஒளிபரப்பான இந்த சீரியலில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது வெண்பா என்ற வில்லி கதாபாத்திரம் தான்.
5/9
Photo Credit: instagram
Share
இந்த வெண்பா என்ற வில்லி கதாபாத்திரம் மட்டும் இல்லை என்றால் பாரதி கண்ணம்மா சீரியலை "அங்கிட்டு போங்கம்மா" என மக்கள் அவாய்ட் செய்திருப்பார்கள். அந்தளவிற்கு வெண்பாவின் தாக்கம் இந்த சீரியலில் அதிகம் இருந்தது.
6/9
Photo Credit: instagram
Share
ஆஹா ஓஹோ என பேசப்படும் இந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை ஃபரீனா ஆசாத். இவரை ஃபரீனா என்று அழைப்பதை விட வெண்பா என்று அடையாளப்படுத்தினால் தான் பலருக்கும் தெரியும். அந்தளவிற்கு வெண்பா கதாபாத்திரத்தில் வில்லியாக நடித்து அசத்தியிருப்பார்.
7/9
Photo Credit: instagram
Share
வெண்பா கதாபாத்திரத்தில் தன்னுடைய வில்லத்தனத்தை வெளிப்படுத்தி ஒட்டுமொத்த ரசிகர்கள் கூட்டத்தையும் கவர்ந்த ஃபரீனா ஆசாத் பட்டித்தொட்டி எங்கும் மிகவும் பிரபமானார். விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழ் தொலைக்காட்சியிலும் ஒரு சில சீரியல்களில் நடித்து வருகிறார்.
8/9
Photo Credit: instagram
Share
சின்னத்திரையில் பாப்புலர் நடிகையாக வலம் வரும் ஃபரீனா தொலைக்காட்சி நிகழ்ச்சிகளையும், திரைப்பட விழாக்களில் தொகுப்பாளனியாகவும் கலக்கி வருகிறார். இப்படி சின்னத்திரையில் அசத்தும் ஃபரீனா சமூக வலைத்தளங்களிலும் மிகவும் ஆக்ட்டிவாக இருந்து வருகிறார். புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பதிவிட்டு ரசிகர்களின் கவனத்தை எப்போதும் தன் மீது இருக்கும்படி ஆக்ட்டிவாக இருந்து வருகிறார்.
9/9
Photo Credit: instagram
Share
அந்தவகையில் நடிகை ஃபரீனா துபாயில் கவர்ச்சி உடையில் வெகேஷனை என்ஜாய் பண்ணும் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்துள்ளார். வொயிட் கலர் கிளாமர் உடையில் மாஸாக போஸ் கொடுத்த ஃபரீனாவின் புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளுடன் இணையத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications