எஸ்டிஆர்-னா சும்மாவா! ஜாம்பவான்களுடன் நேருக்கு நேர் மோதி மாஸ் வெற்றி கண்ட சிம்பு படங்கள்! ஒருத்தரையும் விடலையே!
ஸ்டார் நடிகர்களின் படங்களுடன் நேருக்கு நேர் மோதி தான் யார் என்பதை நிரூபித்து காட்டிய சிம்பு படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வாரிசு நடிகரான சிம்பு குழந்தை நட்சத்திரமாக தனது திரை பயணத்தை தொடங்கினார். பின்னர் 'காதல் அழிவதில்லை' படத்தின் மூலம் நாயகனாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து கோவில், குத்து, மன்மதன், வல்லவன், சிலம்பாட்டம் இப்படியக பல சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் கொடுத்து தனக்கென மிக பெரிய ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார் குறிப்பாக இளைஞர்கள் பட்டாளம் மிக அதிகம். லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் சிம்பு, நடிப்பு மட்டுமல்லாமல் இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணி பாடகர் இப்படி பல துறைகளில் சிறந்து விளங்கி வருகிறார். அந்த வகையில் டாப் நடிகர்களின் படங்களுடன் தன் படங்களை போட்டிபோட்டு களமிறக்கி மெகா ஹிட் கண்ட சிம்பு படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
விஜய்-சிம்பு இருவரும் இதுவரை நேருக்கு நேராக மூன்று முறை மோதிக்கொண்டனர். கில்லி-குத்து, துப்பாக்கி-போடாபோடி, மாஸ்டர்-ஈஸ்வரன் ஆகிய படங்கள் விஜய்யுடன் நேரடியாக மோதிக்கொண்டு வெற்றி கண்ட படங்களுக்கும். என்னதான் விஜய் வசூல் ராஜாவாக இருந்தாலும் எஸ்டிஆர் ரசிகர்கள் சிம்புவை விட்டுக்கொடுக்கவில்லை.
அஜித்-சிம்பு இருவரும் இரண்டு முறை நேருக்கு நேராக மோதிக்கொண்டனர். சிம்பு, அஜித்தின் தீவிர ரசிகராக இருந்தாலும் தொழில் ரீதியாக நீயா நானா என்று போட்டிபோட்டுள்ளார். அந்த வகையில் மன்மதன்-அட்டகாசம் மற்றும் வல்லவன்-வரலாறு என அஜித்தின் ஹிட் படங்களுடன் நேருக்கு நேர் மோதி சிம்பு வெற்றி கண்டுள்ளார்.
கமல்-சிம்பு: 2004ம் ஆண்டு காலகட்டத்தில் வளர்ந்து வரும் இளம் நடிகராக சிம்பு இருந்தார். அப்போது கமலின் விருமாண்டி படத்துடன் சிம்புவின் கோவில் திரைப்படம் நேருக்கு நேர் மோதியது. இளம் நடிகராக இருந்தாலும் கதையின் மீதுகொண்ட நம்பிக்கையால் விருமாண்டியும் கோவிலும் நேரடியாக மோதி மெகா ஹிட் கடந்து. சிம்புவின் திரை பயணத்தில் மிக முக்கிய படமாக இது அமைத்தது.
வெற்றிமாறன் கூட்டணி: மாநாடு படத்தில் இருந்து செம கம்பேக் கொடுத்து வரும் சிம்பு, தொடர்ந்து விதவிதமான கதைகளை தேர்ந்தெடுத்து ஹிட் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது இயக்குநர் வெற்றிமாறனுடன் கூட்டணி அமைத்து வட சென்னை யூனிவெர்சில் சிம்பு இணைந்துள்ளார். இவர்களின் கூட்டணி மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு செம உச்சத்தில் உள்ளது என்றே சொல்லலாம்.


Click it and Unblock the Notifications