ஜெயச்சந்திரன் முதல் கன்னடத்து பைங்கிளி வரை.. இதுவரை உயிரிழந்த தென்னிந்திய திரை பிரபலங்கள்.. யாரெல்லாம் தெரியுமா?
2025ன் முதல் பாதியில் உயிரிழந்த திரை பிரபாலங்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தென்னிந்திய சினிமாவில் பிரபலமான பின்னணி பாடகராக வலம் வந்தவர் பி. ஜெயச்சந்திரன். தமிழ், மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 16,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய திரைப்பட விருது, தமிழ்நாடு அரசி கலைமாமணி விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார். உடல் நலக்குறைவால் கேரளாவில் உள்ள திருச்சூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயச்சந்திரன், சிகிச்சை பலனின்றி கடந்த ஜனவரி 9ம் தேதி தனது 80வது வயதில் உயிரிழந்தார்.
மலையாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கியவர் ரவிக்குமார் மேனன். அதன்பின்னர் இயக்குநர் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் வெளியான 'அவர்கள்' படத்தில் முக்கிய ரோலில் நடித்து மிகவும் பிரபலமானார். தொடர்ந்து பகலில் ஒரு நிலவு, அங்கடி, அலாவுதீனும் அற்புத விளக்கும், உல்லாச யாத்ரா என தமிழ் மற்றும் மலையாளத்தில் சுமார் 100க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையை தொடர்ந்து சின்னத்திரையிலும் நடித்துவந்தார். உடல் நலக்குறைவால் வேளச்சேரியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ரவிக்குமார், சிகிச்சை பலனின்றி கடந்த ஏப்ரல் மாதம் 4ம் தேதி தனது 71வது வயதில் உயிரிழந்தார்.
இயக்குநர் இமையம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா, 'தாஜ் மஹால்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து வெவ்வேறு படங்களில் நடித்து வந்த மனோஜின் படங்கள் பெருமளவில் மக்களை ஈர்க்கவில்லை. இயக்குநராக ஆசைப்பட்ட மனோஜ், உடல் நலக்குறைவால் சிகிச்சையில் இருந்து வந்த நிலையில் கடந்த மார்ச் 25ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவரின் திடீர் மரணம் தமிழ் திரையுலகை சோகத்தில் மூழ்கடித்தது.
சினிமா, சீரியல், சமூக வலைத்தளம் என செம ஆக்ட்டிவாக இருந்து வந்த நடிகர் ராஜேஷ், 150 படங்களுக்கும் மேல் ஹீரோவாகவும், குணச்சித்திர கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார். இவர், கடந்த மே மாதம் 29ம் தேதி தனது 75வது வயதில் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
பிரபல மலையாள நடிகர் விஷ்ணு பிரசாத், கல்லீரல் நோயினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கடந்த மே 2ம் தேதி உயிரிழந்தார்.
குணச்சித்திர வேடத்திலும், காமெடி கதாபாத்திரத்திலும் நடித்து வந்த 'சூப்பர் குட் சுப்பிரமணி', புற்றுநோய் பாதிப்பால் மிகவும் அவதிப்பட்டுவந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி கடந்த மே 10ம் தேதி உயிரிழந்தார்.
குணச்சித்திர வேடத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக வலம் வந்தவர் நடிகர் கோட்டா சீனிவாச ராவ். 750 திரைப்படங்களுக்கும் மேலாக நடித்துள்ள இவர், உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று ஜூலை 13ம் தேதி உயிரிழந்தார்.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி, உடல் நலக்குறைவால் பெங்களூருவில் உள்ள அவரது வீட்டில் இன்று ஜூலை 14ம் தேதி உயிரிழந்தார். இவரின் வயது 87. பிரபலங்கள், ரசிகர்கள் தங்களின் ஆழந்த இரங்கலை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications