Home / Photos
பிரியங்கா முதல் மணிமேகலை வரை.. விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? ஒரு எபிசோடுக்கு இவ்வளவா!
By Chandru
சின்னத்திரையில் மிகவும் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று விஜய் டிவி. ரியாலிட்டி ஷோ, சீரியல் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை என்டேர்டைன் செய்து வருகிறது. பிற தொலைக்காட்சிகளை காட்டிலும் விஜய் டிவிக்கென தனி ரசிகர்களை கூட்டமே உள்ளனர். குறிப்பாக அது இது எது, பிக் பாஸ், சூப்பர் சிங்கர், நீயா நானா, குக் வித் கோமாளி ஆகிய நிகழ்ச்சிகளுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு உள்ளது. நிகழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் அதனை வெற்றி பாதைக்கு வழிநடத்தி கொண்டுச்செல்லும் பொறுப்பு தொகுப்பாளர்களுக்கே உண்டு. அந்த வகையில் மக்களை என்டேர்டைன் செய்யும் விஜய் டிவி தொகுப்பாளர்களின் சம்பளம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Share
விஜய் டிவியின் மிகவும் பிரபலமான குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவர் விஜே ரக்ஷன். இவர் ஒரு எபிசோடுக்கு 1 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.
2/5
Share
விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சி உலக ஃபேமஸ் என்றே சொல்லலாம். உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் இந்த நிகழ்ச்சியை வாரம் தவறாமல் பார்த்துவருகின்றனர். இந்த நிகழ்ச்சியை அசத்தலாக தொகுத்து வழங்கி அதில் வெற்றி கண்டவர் கோபிநாத். இவர் ஒரு எபிசோடுக்கு 5 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்.
3/5
Share
பார்வையாளர்களின் ஃபேவரைட் தொகுப்பாளராக வலம் வருபவர் மாகாபா ஆனந்த். நக்கல், காமெடி பேச்சின் மூலம் மக்களை ஈர்த்த மாகாபா, ஒரு எபிசோடுக்கு 2 லட்சம் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
4/5
Share
விஜய் டிவியின் செல்லப்பிள்ளையாக வலம் வருபவர் பிரியங்கா. சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் ம்யூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் ப்ரியங்காவுக்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். கலகலப்பான பேச்சின் மூலம் மக்களை ஈர்த்த பிரியங்கா, ஒரு எபிசோடுக்கு 2 லட்சம் முதல் 2.5 லட்சம் ரூபாய் வரை சம்பளம் வாங்குகிறார்.
5/5
Share
சமீபத்தில் விஜய் டிவியில் பெரிய பஞ்சாயத்தை கிளப்பியவர் விஜே மணிமேகலை. விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்த மணிமேகலை, சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுதி வழங்கி வந்தவர். அப்போது விஜே ப்ரியங்காவுடனான மோதலில் அந்த ஷோவில் இருந்து தானே விலகிக்கொண்டதாக தெரிவித்தார். தற்போது மணிமேகலை-பிரியங்கா பஞ்சாயத்து புயலாக வீசி வருகிறது. இந்த நிலையில் மணிமேகலை, ஒரு எபிசோடுக்கு 60 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் சம்பளம் வாங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications