Home / Photos
வீக்கெண்டில் ஊட்டி, கொடைக்கானல் போறீங்களா? இதை நோட் பண்ணுங்கப்பா!
By Divya Bala
கோடை வெப்பத்தை தணிக்க பலரும் தேர்வு செய்வது ஊட்டி, கொடைக்கானல் தான். ஆனால் அங்கு செல்லும் முன் இந்த முக்கியமான விஷயங்களை கண்டிப்பா தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.
1/5
Photo Credit: AI
Share
கொடைக்கானல் செல்லும் போது பீக் நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். அதனால் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் இருக்க முடியும்.
2/5
Photo Credit: AI
Share
மலைப்பாதைகளில் அதிக வேகத்தில் வாகனம் ஓட்டாதீர்கள், கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்தானவை. மேலும் கொடைக்கானல் ஏரி அருகில் எங்கும் வேண்டுமென்றே வாகனத்தை நிறுத்துவதை தவிர்க்கவும், அங்கு விதிமுறைகள் மிகவும் கடுமையாக இருக்கும்.
3/5
Photo Credit: AI
Share
எங்கு வேண்டுமானாலும் இருக்கும் கடைகளில் சாப்பிட வேண்டாம், சுத்தமான இடங்களில் மட்டுமே உணவருந்தவும். பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த வேண்டாம் சுற்றுச்சூழலை பாதுகாப்பது மிகவும் முக்கியம்.
4/5
Photo Credit: AI
Share
தெரியாத ட்ரெக்கிங் பாதைகளில் கைட் இல்லாமல் செல்லாதீர்கள், அது ஆபத்தாக முடியும். கொடைக்கானல் வானிலையை லேசாக எடுத்துக்கொள்ளாமல், குளிருக்கு தேவையான உடைகளை எடுத்துச் செல்ல வேண்டும். சுற்றுலா இடங்களில் குப்பை போடாதீர்கள், அபராதம் விதிக்கப்படும். கேமராக்கள் ஆங்காங்கே பொருத்தப்பட்டுள்ளன.
5/5
Photo Credit: AI
Share
படகு சவாரிக்கு செல்பவர்கள் வரிசையில் காத்திருக்க நேரிடும், கைகளில் தண்ணீர் வைத்திருப்பது நல்லது. மேலும் இரவு நேரங்களில் தேவையில்லாமல் வெளியே சுற்றுவது மற்றும் பனி இருக்கும் நேரங்களில் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications