சன் டிவியில் என்ட்ரி கொடுக்கும் மூன்று புதிய சீரியல்கள்.. என்னென்ன?
சன் டிவியில் விதவிதமான சீரியல்களில் ஒளிபரப்பாகி பர்வையாளர்களை ஈர்த்து வரும் நிலையில் மேலும் மூன்று புது சீரியல்கள் ரிலீசாகி பார்வையாளர்களை ஈர்க்க தயாராகியுள்ளது.
சின்னத்திரையில் நம்பர் ஒன் தொலைக்காட்சியாக மக்களை கவர்ந்து வருகிறது சன் டிவி. விதவிதமான சீரியல்கள் தொடங்கி வித்தியாசமான ரியாலிட்டி ஷோ மூலம் பார்வையாளர்களை கவர்ந்து வாருகிறார். குறிப்பாக சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் பலரின் ஃபேவரைட் என்றே சொல்லலாம். பொழுது சாஞ்சா போதும் "6 மணியாச்சா?சன் டிவிய போடுங்கப்பா சீரியல் பாக்கணும்" என்ற வார்த்தையை நாம் நம் வீட்டில் அதிகம் கேட்டுருப்போம். அப்படியாக உணர்ச்சிபூர்வமான சீரியல்கள் மூலம் பார்வையாளர்களை ஈர்த்து வரும் சன் டிவி, தனது லிஸ்டில் மேலும் மூன்று சீரியல்களை களமிறங்கியுள்ளது. வாங்க என்னென்ன சீரியல் என பார்ப்போம்.
சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள சீரியல் 'நாகமணி'. இது ஒரு டாப்பிங்க் சீரியல் ஆகும், ஹிந்தியில் நல்ல வரவேற்பு பெற்ற இத்தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு நாகமணி என்ற பெயரில் ரிலீசாகவுள்ளது. இத்தொடர் இரவு 10.30 மணிக்கு மேல் ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ள மற்றொரு சீரியல் 'பராசக்தி'. மிஸ்டர் மனைவி சீரியலில் ஜோடியாக நடித்த அதே ஜோடி தான் பராசக்தி சீரியலிலும் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத்தொடர் சன் டிவி பார்வையாளர்களை ஈர்க்க வருகிறது.
ஆன்மிக தொடர்களுக்கு என்றும் மவுசு அதிகம் தான். அந்த வகையில் 'வீர அனுமான்' என்ற சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. ஹிந்தியில் ஒளிபரப்பப்பட்டு இத்தொடர் தற்போது தமிழில் டப் செய்யப்பட்டு சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட உள்ளது.


Click it and Unblock the Notifications