படம் முழுக்க ட்விஸ்ட்.. சீனுக்கு சீன் த்ரில்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய தரமான மலையாள படங்களின் லிஸ்ட்!
இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்த்து ரசிக்கவேண்டிய தரமான திரில்லர், மிஸ்ட்ரி திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Soothravakyam'. பள்ளி மாணவர்களுக்கு தனது வீட்டில் படம் நடத்தி வரும் போலீஸ் அதிகாரி எதிர்கொள்ளும் சிக்கல். திடிரென ஒரு பள்ளி மாணவர் காணாமல் போக என்ன நடந்தது என்பதே படத்தின் மீதி த்ரில் கதை. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
ஆசிப் அலி நடிப்பில் 2022ல் வெளிவந்த திரில்லர் ட்ராமா திரைப்படம் 'Innale Vare'. திரை பிரபலங்களை ஏமாற்றிய தொழில்நுட்ப கொள்ளையர்களின் கதை. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.
ஆசிப் அலி நடிப்பில் கடந்தாண்டு வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் 'Mirage'. காணாமல் போன வருங்கால கணவரை தேடும் இளம் பெண்ணின் கதை. ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இப்படத்தை சோனி லைவ் ஓடிடியில் காணலாம்.
அர்ஜுன் அசோகன், அபர்ணா டாஸ் ஆகியோர் நடிப்பில் 2024ல் வெளிவந்த க்ரைம், திரில்லர் திரைப்படம் 'Anand Sreebala'. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடியில் காணலாம்.
அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2022ல் வெளிவந்த மலையாள திரில்லர் திரைப்படம் 'Ini Utharam'. இந்த த்ரில் படத்தை ஜீ5 ஓடிடியில் காணலாம்.


Click it and Unblock the Notifications