Home / Photos
PHOTOS : ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டாப் 10 சீரியல் கில்லர் திரைப்படங்களின் லிஸ்ட்..
By Chandru
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சீரியல் கில்லர் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என படங்கள் வந்தாலும் ரசிகர்கள் பலர் சீரியல் கில்லர் கதை அம்சம் கொண்ட படங்களை விரும்புகின்றனர்.
1/12
Photo Credit: filmibeat
Share
தமிழ் சினிமாவில் சமீபகாலமாக சீரியல் கில்லர் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.காதல், ரொமான்ஸ், ஆக்ஷன் என படங்கள் வந்தாலும் ரசிகர்கள் பலர் சீரியல் கில்லர் கதை அம்சம் கொண்ட படங்களை விரும்புகின்றனர்.
2/12
Photo Credit: filmibeat
Share
சீரியல் கில்லர் கதையம்சம் கொண்ட படங்கள் பெரும்பாலும் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டே இயக்குநர்கள் படத்தை இயக்குகின்றனர்.இந்த வகையில் தமிழ் சினிமாவில் அன்று முதல் இன்று வரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த சீரியல் கில்லர் திரைப்படங்கள் எவை எவை என பார்ப்போம்.
3/12
Photo Credit: filmibeat
Share
முதலில் இயக்குநர் ராம் குமார் இயக்கத்தில் 2018ம் ஆண்டு வெளியான சீரியல் கில்லர் த்ரில்லர் திரைப்படம் "ராட்சசன்". இப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால், நடிகை அமலா பால் மற்றும் பல பிரபலங்கள் நடித்துள்ளனர். ஒரு சைக்கோ ஆண் பல இளம் பெண்களை மட்டுமே குறிவைத்து கொலை செய்யும் சீரியல் கில்லர் கதையாக எடுக்கப்பட்டது.இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
4/12
Photo Credit: filmibeat
Share
இரண்டாம் இடத்தில் இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நடிகர் விக்ரம், விவேக், நடிகை சதா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் அந்நியன்.இப்படம் மிக பெரிய பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.வித்தியாசமான கதைக்களத்தை கொண்டு இயக்குநர் ஷங்கர் இப்படத்தை இயக்கியுள்ளார்.சமுதாயத்தில் ஏற்படும் சில பிரச்னையால் விக்ரம் மனம் ரீதியாக பாதிக்கப்பட்டு ஒரு சைக்கோவை போல் நடந்துகொள்ளும் கதையாக ஷங்கர் அருமையாக இயக்கியுள்ளார்.
5/12
Photo Credit: filmibeat
Share
மூன்றாம் இடத்தில் இயக்குநர் பாரதிராஜா இயக்கத்தில் கமலஹாசன், ஸ்ரீ தேவி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் "சிவப்பு ரோஜாக்கள்". சீரியல் கில்லர் மற்றும் உளவியல் பிரச்னைகளை சொல்லும் படமாகி பாரதிராஜா இயக்கியுள்ளார்.மேலும் தமிழ் சினிமாவின் சைக்கோ படங்களுக்கு ஆரம்ப புள்ளியாக இப்படம் அமைந்தது.இப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது.
6/12
Photo Credit: filmibeat
Share
நான்காம் இடத்தில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கத்தில் நடிகர் விக்ரம், ஜோதிகா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் "வேட்டையாடு விளையாடு". சிவப்பு ரோஜாக்கள் படத்தை தொடர்ந்து சுமார் 28 ஆண்டுகளுக்கு பின் சைக்கோ கதை உடைய வேட்டையாடு விளையாடு படத்தில் கமல் நடித்துள்ளார்.இப்படத்தில் இரு மருத்துவ நண்பர்கள் பல பெண்களை கொலை செய்யும் சைக்கோ படமாக இயக்குநர் இயக்கியுள்ளார்.இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
7/12
Photo Credit: filmibeat
Share
ஐந்தாம் இடத்தில் இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அனுராக் காஷ்யப், அதர்வா, ராஷி கண்ணா, விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் வெளியான படம் "இமைக்கா நொடிகள்". பல திருப்புமுனை கொண்ட த்ரில்லர் படமாக இப்படம் அமைந்தது.காதல், ரொமான்ஸ் என கலக்கிய நயன்தாரா இப்படத்தில் தனது நடிப்பினால் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார்.
8/12
Photo Credit: filmibeat
Share
ஆறாம் இடத்தில் மீண்டும் கமல் நடித்த படமே இடம் பிடித்துள்ளது.இயக்குநர் சுரேஷ் கிஸ்னா இயக்கத்தில் நடிகர் கமல் நடிப்பில் வெளியான சீரியல் கில்லர் திரைப்படம் "ஆளவந்தான்". இப்படத்தில் கமல் டூயல் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.இப்படம் 'தாயம்' என்ற த்ரில்லர் நாவலை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டது.கமலின் மூன்றாவது சைக்கோ படமாக ஆளவந்தான் அமைந்தது.
9/12
Photo Credit: filmibeat
Share
ஏழாம் இடத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான 'மன்மதன்' திரைப்படம் இடம் பிடித்துள்ளது.இப்படத்தின் மூலம் சிம்பு முதல் முறையாக டூயல் கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.இப்படத்தில் ஜோதிகா, சந்தானம், கவுண்டமணி மற்றும் அதுல் குல்கர்னி ஆகியோர் நடித்துள்ளனர்.இளைஞர்கள் பலரின் ஃபேவரைட் படமாக அமைந்தது.


Click it and Unblock the Notifications