நிமிடத்திற்கு இத்தனை லட்சம் வருமானமா? இந்தியாவின் டாப் 5 கோடீஸ்வரர்களின் ஒரு நிமிட வருமானம்.. எவ்வளவு தெரியுமா?
இந்தியாவின் டாப் கோடீஸ்வரர்கள் ஒரு நிமிடத்திற்கு எவ்வளவு வருமானம் ஈட்டுகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
உலகின் மிகப்பெரிய இரும்பு உற்பத்தி மற்றும் சுரங்க நிறுவனம் வைத்திருப்பவர் ArcelorMittal நிறுவனத்தின் நிறுவனர் லட்சுமி மிட்டல். இந்திய கோடீஸ்வரரான இவரின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சத்து 43 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. இவர், நிமிடத்திற்கு ரூ.1.05 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த டாப் 5 பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளார்.
சீரம் நிறுவனத்தின் நிறுவனர் சைரஸ் பூனவல்லா இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சத்து 22 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. இவர், நிமிடத்திற்கு ரூ.1.06 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
HCL நிறுவனத்தின் நிறுவனர் ஷிவ் நாடார் இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு 2 லட்சத்து 88 ஆயிரம் கோடி என கூறப்படுகிறது. இவர், நிமிடத்திற்கு ரூ.1.13 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இந்த டாப் 5 பட்டியலில் அதானி இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார். இவர், நிமிடத்திற்கு ரூ.1.42 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.
இறுதியக, நம்பர் ஒன் இடத்தில முகேஷ் அம்பானி உள்ளார். இந்தியாவின் டாப் கோடீஸ்வரரான இவர், நிமிடத்திற்கு ரூ.1.50 லட்சம் வருமானம் ஈட்டி வருவதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications