ஒரு லட்சம் இருந்தால் போதும்.. வெளிநாடுகளை சுற்றிப்பார்க்கலாம்? எந்தெந்த நாடு? லிஸ்ட்!
இந்த சம்மருக்கு ரூபாய் ஒரு லட்சம் பட்ஜெட்டில் சுற்றிப்பார்க்க ஏதுவான வெளிநாடு சுற்றுலா தலங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியர்களின் விருப்பமான வெளிநாட்டு சுற்றுலாத் தலமாக தாய்லாந்து உள்ளது. ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாய்லாந்து நாட்டுக்கு சுற்றுலா செல்வது வழக்கம். அதிலும் குறிப்பாக இளைஞர்களின் வாழ்நாள் ஆசைகளில் தாய்லாந்து ஒன்றாக உள்ளது. மேலும் இந்தியர்களுக்கு விசா தளர்வும் கொடுக்கப்பட்டுள்ளது. நபர் ஒருவருக்கு ரூ.50,000-85,000 இருந்தால் தாய்லாந்து நாட்டை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்.
5000 ஆண்டுகள் பழமையான நாடு அசர்பைசான். கட்டிடக்கலை, வித்தியாசமான உணவுகள், அழகான கடற்கரைகள் என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. ரூ.50,000-70,000 பட்ஜெட் இருந்தால் போதும் அசர்பைசான் நாட்டை ஜாலியாக சுற்றிப்பார்க்கலாம்.
குறைந்த பட்ஜெட்டில் வெளிநாடு பயணம் செல்ல செற்ற நாடு இலங்கை. இந்தியாவின் பக்கத்து நாடான இலங்கைக்கு செல்ல குறைந்த செலவே ஆகும். தீவு நாடான இலங்கை தனக்குள் பல இயற்கை அதிசயங்கள் கொண்டுள்ளது. அடர்த்த காடுகள், தேயிலை தோட்டங்கள், யானைகள் சரணாலயம் என சுற்றிப்பார்க்க ஏராளமான இடங்கள் உள்ளன. ரூ.50,000 பட்ஜெட்டில் தாராளமாக சுற்றுப்பார்க்கலாம்.
ஆசியாவில் உள்ள அழகான நாடு கஜகஸ்தான். அழகும் அமைதியும் நிறைந்த அந்நாட்டை சுற்றிப்பார்க்க இந்தியர்களுக்கு 14 நாட்கள் இலவச விசா கொடுக்கப்பட்டுள்ளது. இயற்கை அழகு நிறைந்த அந்நாட்டிற்கு பயணிக்க ரூ.70,000-90,000 பட்ஜெட் இருந்தால் போதும்.
உலகளவில் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நாடு வியட்நாம். ஹனிமூன் செல்பவர்களுக்கும், நண்பர்கள், குடும்பத்துடன் சுற்றுலா செல்ல ஏற்ற நாடாகும். அந்நாட்டின் பண மதிப்பு இந்தியா ரூபாயை விட மிக குறைவு என்பதால் ரூ.1 லட்சம் இருந்தால செம ஜாலியாக வியட்நாமை சுற்றிப்பார்க்கலாம்.
உலகின் அழகான நாடுகளில் ஒன்று ஜோர்ஜியா. குடும்பத்துடன் நிம்மதியான ஒரு ட்ரிப் சேலை ஏற்ற நாடாகும். ரூ.50,000-70,000 இருந்தால் ஜோர்ஜியா நாட்டை தாராளமாக சுற்றிப்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications