சென்னையில் இருந்து ஒரு நாள் ட்ரிப்.. எங்கெல்லாம் போகலாம்?
சென்னையில் இருந்து ஒரே நாளில் சுற்றுப்பார்க்க சூப்பரான இடங்கள் என்னென்ன? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் எங்க போகலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மீனாட்சி அம்மன் கோவில், அத்திவரதர் என பல முக்கியமான பழமையான சிறப்புமிக்க கோவில் நிறைந்த பயணத்திற்கு ஏற்ற இடம் காஞ்சிபுரம். விதவிதமான உணவுகளை ருசித்தபடி வீக் எண்டை குடும்பத்துடன் என்ஜாய் பண்ணலாம். சென்னையில் இருந்து வெறும் 2 மணிநேரம் பயணம் மட்டுமே.
வரலாறு சிறப்புமிக்க கோட்டைகள், கோவில்கள் ஆகியவற்றை ஒன்றாக காண சிறந்த இடம் வேலூர். குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க நல்ல இடமாகும். சென்னையில் இருந்து வெறும் 2.5 மணிநேரம் பயணத்தில் வீக் எண்டை என்ஜாய் பண்ணலாம்.
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற சூப்பரான இடம் புலிகாட். குழந்தைகளுடன் சென்று விதவிதமான பறவைகளை கண்டு மகிழலாம். சென்னையில் இருந்து ஒன் டே ட்ரிப்புக்கு ஏற்ற இடமாகும்.
இந்த சம்மருக்கு குடும்பத்துடன் குளித்து என்ஜாய் பண்ண சிறந்த இடம் தடா அருவி. கோடை வெப்பத்தில் இருந்து தப்பிக்க தடா அருவிக்கு ட்ரிப் பிளான் பண்ணுங்க. சென்னையில் இருந்து வெறும் 3 மணிநேரம் பயணம் மட்டுமே.
அமைதியான, குளுமையான கூட்டமில்லாத மலைவாசஸ்தலம் 'ஏலகிரி'. குடும்பத்துடனும், நண்பர்ககுடனும் இந்த சம்மரை என்ஜாய் பண்ண சூப்பர் இடமாகும். சென்னையில் இருந்து வெறும் 5 மணிநேரம் பயணத்தில் குளு குளு கிளைமேட்டை என்ஜாய் பண்ணலாம்.


Click it and Unblock the Notifications