ஊட்டி, கொடைக்கானலை ஓரங்கட்டுங்க.. தமிழ்நாட்டில் உள்ள அறியாத மலைவாசஸ்தலங்கள்.. சூப்பர் லிஸ்ட்!
மக்கள் அனைவரும் செல்ல விரும்பும் ஊட்டி, கொடைக்கானல் மலைவாசஸ்தலங்களை ஓரங்கட்டிவிட்டு யாருக்கும் பெரிதும் பரிட்சயம் இல்லாத மலைவாசஸ்தலங்கள் என்னென்ன? இந்த சம்மருக்கு குடும்பத்துடன் எங்க போகலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஓசூரில் அமைத்துள்ள பலருக்கும் தெரியாத மலைவாசஸ்தலம் ஐயூர் சுற்றுசூழல் பூங்கா. ஓசூரில் இருந்து சுமார் 42 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளதாம். வனத்துறையினரின் அனுமதி பெற்று ஐயூர் சுற்றுசூழல் பூங்காவை சுற்றிப்பார்க்கலாம். குளுமையான அடர்ந்த மரங்கள் நிறைந்த வனப்பகுதியாக அமைத்துள்ளது. யானைகள் மற்றும் சில வனவிலங்குகளை நாம் காணலாம். அதேபோல் நீர்விழ்ச்சிகளும் உள்ளதாம். மக்கள் கூட்டம் மிகவும் குறைவாக இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தை சுற்றிப்பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
குட்டி கொடைக்கானல் என்று அழைக்கப்படும் மலைவாசஸ்தலம் பன்றிமலை. திண்டுக்கல்லில் இருந்து வெறும் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள இந்த சுற்றுலாத்தலம் இந்த சம்மருக்கு ஏற்ற குளுமையான இடமாகும். கூட்டம் மிக மிக குறைவாக இருக்கும் இந்த மலைவாசஸ்தலத்தை சுற்றிப்பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
திருவண்ணாமலையில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் ஜவ்வாது மலை. நண்பர்களுடன் ட்ரெக்கிங், குடும்பத்துடன் படகு சவாரி என இந்த கோடைகாலத்திற்கு ஏற்ற சூப்பரான சுற்றுலாத்தலமாகும். அமைதியான இந்த இடத்தை இந்த சம்மர் மிஸ் பண்ணிடாதீங்க.
தர்மபுரியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் வத்தல்மலை. ஏலகிரியை விட அதிக கொண்டைஊசி வளைவுகள் கொண்ட இந்த மலைவாசஸ்தலத்தில் சூப்பரான வியூ பாயிண்டுகள் உள்ளன. அமைதியான இந்த சுற்றுலாத்தலத்தை இந்த சம்மர் மிஸ் பண்ணிடாதீங்க.
திருச்சியில் இருந்து 80 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் பச்சைமலை. குளு குளு கிளைமேட்டுடன் குடும்பத்துடன் அமைதியாக வெகேஷனை என்ஜாய் பண்ண சூப்பரான இடமாகும்.


Click it and Unblock the Notifications