மெரினா பீச்சுக்கு இணையான.. பலரும் அறியாத கடற்கரைகளில் பட்டியல்.. இந்த சம்மருக்கு எங்க போகலாம்?
இந்த சம்மருக்கு கூட்டமே இல்லாத அமைதியான சுற்றுலாத்தலத்திற்கு செல்ல மக்கள் அதிக ஆர்வம் கட்டுவது வழக்கம். அதேபோல் கடற்கரை பலரின் ஃபேவரைட் ஸ்பாட்டாகவும் இருந்து வருகிறது. அப்படியான ஃபேவரைட் ஸ்பாட் அதிகப்படியான மக்கள் கூட்டத்தை ஈர்க்க பெரும்பாலான பாப்புலர் கடற்கரைகள் மக்கள் வெள்ளத்தில் நிரம்பி வழிகிறது. இப்படியான சூழ்நிலையில் மக்கள் கூட்டமே இல்லாத பலரும் அறியாத கடற்கரைகள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடலூரில் அமைந்துள்ள அமைதியான அழகான கடற்கரை 'சில்வர் பீச்'. கடல் உணவுகளை ருசித்தபடி குடும்பத்துடனும், நண்பர்களுடனும் சம்மரை ஜாலியாக என்ஜாய் பண்ணலாம்.
நாகப்பட்டினத்தில் அமைந்துள்ள அமைதியான கடற்கரை 'தரங்கம்பாடி பீச்'. சூரிய உதயத்தின் அழகான காட்சியை இந்த பீச்சில் இருந்து கண்டு ரசிக்கலாம். பீச்சுக்கு அருவில் போர் வரலாறு சிறப்புமிக்க டான்ஸ்போர்க் கோட்டை உள்ளது. இந்த கடற்கரைக்கு செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
கன்னியகுமாரியில் அமைந்துள்ள அழகான அமைதியான கடற்கரை 'வட்டக்கோட்டை பீச்'. மக்கள் கூட்டம் குறைவாகவே காணப்படும் இந்த கடற்கரைக்கு செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
தூத்துக்குடியில் அமைந்துள்ள சூப்பரான கடற்கரை 'மணப்பாடு பீச்'. கூட்டம் குறைவாகவே இருக்கும் இந்த பீச்சில் கடல் உணவுகளை ருசித்தபடி அலைகளின் ஓசையை கேட்டுக்கொண்டு மனஅமைதி பெறலாம். இந்த சம்மர் மிஸ் பண்ணிடாதீங்க.
கன்னியகுமாரியில் அமைத்துள்ள மற்றொரு சூப்பர் கடற்கரை ஸ்பாட் 'தேங்காய்பட்டினம் பீச்'. படகு சவாரி, விதவிதமான கடல் உணவுகள் என குடும்பத்துடன் அமைதியாக நேரத்தை செலவழிக்க சூப்பரான இடமாகும்.


Click it and Unblock the Notifications