கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க.. குளுகுளுன்னு ஒரு குளியல் போடணுமா? பலரும் அறியாத நீர்விழ்ச்சி ஸ்பாட்.. லிஸ்ட்!
சுட்டெரிக்கும் வெளியிலில் இருந்து தப்பிக்க இந்த கோடையில் என்ஜாய் பண்ணவேண்டிய குளுகுளு நீர்விழ்ச்சி ஸ்பாட் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கொடைக்கானலில் அமைந்துள்ள சூப்பரான நீர்விழ்ச்சி ஸ்பாட் 'அஞ்சு வீடு அருவி'. பலருக்கும் பரிச்சயம் இல்லாத இந்த அருவியை கொஞ்சம் ட்ரெக்கிங் செய்து அணுகும் வகையில் அமைத்துள்ளது. சுற்றிலும் அடர்ந்த காட்டுக்குள் அமைத்துள்ள இந்த அருவி, கோடை காலத்திற்கு ஏற்ற குளுமையான இடமாகும். கூட்டம் குறைவாகவே இருக்கும் இந்த அருவியில் குளிக்க இந்த சம்மர் மிஸ் பண்ணிடாதீங்க.
கொடைக்கானலில் உள்ள மற்றொரு சூப்பரான நீர்விழ்ச்சி ஸ்பாட் 'வட்டக்கானல் அருவி'. ஆண்டு முழுவதும் தண்ணீர் கொட்டும் அருவியாக உள்ளது. கூட்டம் குறைவாகவே இருக்கும் இந்த அருவியில் குளிக்க இந்த சம்மர் மிஸ் பண்ணிடாதீங்க.
கொல்லிமலையில் அமைந்துள்ள சூப்பரான நீர்விழ்ச்சி ஸ்பாட் 'ஆகாய கங்கை நீர்வீழ்ச்சி'. கோடை விடுமுறையை கொண்டாட பெரும்பாலான மக்கள் ஊட்டி, கொடைக்கானலுக்கு பயணித்துள்ளதால் கொல்லிமலையில் குறைவான சுற்றுலாப்பயணிகள் வருகை உள்ளதாக கூறப்படுகிறது. அந்த வகையில் குளு குளு கிளைமேட்டுடன் சில்லுனு இருக்கும் தண்ணீரில் குளித்து என்ஜாய் பண்ண ஆகாய கங்கை நீர்வீழ்ச்சிக்கு ஒரு ட்ரிப் பிளான் பண்ண மிஸ் பண்ணிடாதீங்க.
உத்தமபாளையத்தில் அமைத்துள்ள 'ஆனைக்கரைப்பட்டி நீர்வீழ்ச்சி'. நண்பர்களுடனும், குடும்பத்துடனும் குளித்து என்ஜாய் பண்ண சிறந்த இடமாகும். இந்த சம்மர் ஆனைக்கரைப்பட்டி நீர்வீழ்ச்சி செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
மதுரையின் குற்றாலம் தான் 'குட்லாடம்பட்டி அருவி'. சிறுமலை ரிசர்வ் வனப்பகுதியில் சோழவந்தான் கிராமத்தில் அமைத்துள்ள சூப்பரான ஹிட்டன் நீர்விழ்ச்சி ஸ்பாட். அடர்த்த காட்டுக்குள் அமைத்துள்ள இந்த நீர்விழ்ச்சிக்கு செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications