கோவையில் சுற்றி பார்க்க சூப்பரான ஸ்பாட்.. குடும்பத்துடன் என்ஜாய் பண்ண இத்தனை இடங்கள் இருக்கா?
தமிழ்நாட்டின் முக்கிய மாவட்டங்களில் ஒன்று கோவை. இயற்கை எழில் கொஞ்சும் மாவட்டமாகவும் உள்ளது. அப்படியான கோவையில் சுற்றிப்பார்க்க சூப்பரான இடங்கள் என்னென்ன உள்ளது? இந்த சம்மருக்கு எங்க போகலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
பொள்ளாச்சியில் இருந்து 65 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சூப்பரான ஸ்பாட் 'வால்பாறை'. கொளுத்தும் வெயிலில் இருந்து தப்பிக்க மக்கள் கூட்டம் குறைவாக இருக்கும் வால்பாறை சிறந்த ஸ்பாட்டாக இருக்கும். தேயிலை தோட்டங்கள், மிதந்து செல்லும் மேகங்கள் என குடும்பத்துடன் குளுமையை என்ஜாய் பண்ணலாம்.
பொள்ளாச்சியில் இருந்து 20 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சுற்றுலாத்தலம் 'ஆழியார் அணை'. அணையில் உள்ள பூங்காவில் அமைதியாக ரிலாக்ஸ் செய்யலாம், குடும்பத்துடனும், நண்பர்களுடனும் படகு சவாரி செய்து மகிழலாம். சுற்றுலா பயணிகளை அதிகம் ஈர்க்கும் இடமாக உள்ளது.
ஆழியார் அணைக்கு அருவில் அமைத்துள்ள சூப்பர் ஸ்பாட் 'குரங்கு அருவி'. கடுமையான வெயிலில் இருந்து தப்பித்து சூப்பரான ஒரு குளியல் போட சூப்பரான இடமாகும்.
கோவையில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ள சூப்பர் ஸ்பாட் 'வெள்ளியங்கிரி மலை'. மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைத்துள்ள இந்த வெள்ளியங்கிரி மலை சுற்றுலா பயணிகளையும், பக்தர்களையும் அதிகம் ஈர்க்கும் ஸ்பாட்டாக உள்ளது.
கோவையில் உள்ள சூப்பரான சுற்றுலா தலம் 'கோவை குற்றாலம்'. கோவையில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் அமைத்துள்ளது. சுட்டெரிக்கும் வெயிலில் இருந்து தப்பிக்க கோவை குற்றாலத்துக்கு ஒரு ட்ரிப் செல்ல மிஸ் பண்ணிடாதீங்க.
கோவையில் இருந்து 28 கிலோமீட்டர் தொலையில் அமைத்துள்ள அருவி 'வைதேகி நீர்வீழ்ச்சி'. காட்டுக்குள் அமைத்திருக்கும் சூப்பரான ஹிட்டன் ஸ்பாட். வனத்துறையினரிடம் அனுமதி பெற்று குளுமையான அருவியில் ஜாலி பண்ணலாம்.


Click it and Unblock the Notifications