Home / Photos
இந்த விடுமுறையை கழிக்க கோவையை சுற்றி இருக்கும் டூரிஸ்ட் ஸ்பாட்கள்..!!
பொதுவாக கோயம்புத்தூரை சுற்றி நீலகிரி, ஊட்டி, குன்னூர் என பல சுற்றுலா தலங்கள் உள்ளன. இந்த கோடை விடுமுறையை குழந்தைகளுடன் கொண்டாட கோவையை சுற்றி இருக்கும் சுற்றுலா தளங்களை இப்போது பார்ப்போம்.
1/7
Share
கோவை கொண்டாட்டம் தீம் பார்க்: குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த இந்த தீம் பார்க் பேரூரிலிருந்து 2 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
2/7
Share
வைதேகி வாட்டர் பால்ஸ்: கோயம்புத்தூரில் இருந்து சுமார் 35 கி.மீ தொலைவில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சிக்கு செல்ல சிறப்பு அனுமதி வேண்டும் என்று கூறப்படுகிறது.
3/7
Share
கோவை குற்றாலம் நீர்வீழ்ச்சி: குற்றாலத்தை போல அமைந்துள்ள இந்த சிறுவாணி நீர்வீழ்ச்சி வெள்ளையங்கிரி மலைப் பகுதியிலிருந்து 10 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது.
4/7
Share
மங்கி பால்ஸ்: கோயம்புத்தூரில் இருந்து 60 கி.மீ தொலைவிலும், பொள்ளாச்சியில் இருந்து 30 கி.மீ தொலைவிலும் இந்த குரங்கு நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த இடம் ஆழியார் அணைக்கு அருகில் அமைந்துள்ளது.
5/7
Share
ஈஷா யோகா மையம்: கோவைக்கு மேற்கே 30 கிமீ தொலைவில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஈஷா யோகா மையம் அமைந்துள்ளது. இங்குள்ள 112 அடி (34 மீ) உயரமுள்ள சிவன் உருவ சிலை, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பல சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது.
6/7
Share
பிளாக் தண்டர்: கோயம்புத்தூரில் இருந்து அவினாசி சாலையில் 40 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த தீம் பார்க் 49 விளையாட்டுக்களுடன் சுமார் 75 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. குழந்தைகளுடன் நேரத்தை செலவிட இது ஒரு சிறந்த இடம்.
7/7
Share
ஆழியார் அணை: பொள்ளாச்சி அருகே அமைந்துள்ள இந்த நீர்த்தேக்கம் கோவையில் இருந்து 6.5 கி.மீ. தொலைவில் உள்ளது. பொழுதுபோக்கு பூங்காக்கள், மீன் காட்சியகங்கள், தீம் பார்க்குகள் இங்கு அமைந்துள்ளன.


Click it and Unblock the Notifications