இந்தியர்களை வாங்க வாங்க என அழைக்கும் நாடுகள்.. என்னென்ன? இந்த சம்மருக்கு எங்க போகலாம்? லிஸ்ட்!
சுற்றுலா பயணிகளின் வருகையை நம்பி பல நாடுகள் உள்ளன. அதில் வரும் வருமானம் கொண்டு நாட்டை மேம்படுத்தி வருகின்றனர். மேலும் உலகளவில் இந்தியர்கள் கால்பதிக்காத நாடுகளே இல்லை என கூறலாம். அப்படி இந்தியர்களுக்கு அதிக சலுகைகள் கொடுத்து வரவேற்கும் நாடுகள் என்னென்ன? இந்த கோடையில் எந்தெந்த நாட்டிற்கு பயணிக்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியர்கள் விரும்பு பயணிக்கும் நாடுகளில் ஒன்று மாலத்தீவு. தீவு நாடான மாலத்தீவு இந்த சம்மருக்கு ஏற்ற சூப்பரான நாடாக உள்ளது. விதவிதமான கடல் உணவுகள், கடற்கரைகள் என குடும்பத்துடனும், துணையுடனும் அமைதியான ஒரு ட்ரிப் செல்ல செம சூப்பராக இருக்கும். இந்தியர்களுக்கு மாலத்தீவு அரசு 90 நாட்கள் இலவச விசா சேவை வழங்கி வருகிறது.
இந்தியர்களின் விருப்பமான நாடுகளில் ஒன்று மலேசியா. குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வெகேஷன் சென்று என்ஜாய் பண்ண சிறந்த சுற்றுலா நாடாக உள்ளது. இந்தியர்களுக்கு 2026 டிசம்பர் வரை இலவச விசா வழங்கி வருகிறது.
பட்ஜெட்டுக்குள் அடங்கும் மற்றொரு சுற்றுலா நாடு நேபாளம். நேபாளத்தின் விதவிதமான உணவுகள், வழிபாட்டுத் தலங்கள் என மலிவான விலையில் சூப்பரான ஒரு ட்ரிப் செல்ல ஏற்ற நாடாகும். இந்தியர்கள் நேபாளம் செல்ல விசா தேவையில்லை. இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆவணங்கள் இருந்தால் போதும் நேபாளத்தை சூப்பரா சுற்றி பார்க்கலாம்.
இந்தியர்களின் விருப்பமான நாடுகளில் ஒன்று இலங்கை. பக்கத்து நாடான இலங்கை வெப்பமண்டல காடுகளால் சூழப்பட்டுள்ளது. வனவிலங்கு பூங்கா, கடற்கரைகள், இயற்கையை ரசித்தபடியே செல்லும் ரயில் பயணங்கள், கோவில்கள் என கோடை விடுமுறையை கொண்டாட சூப்பரான சுற்றுலா நாடாகும். மேலும் அந்நாடு இந்தியர்களின் வருகையை அதிகரிக்க 30 நாட்கள் ஃப்ரீ விசா சேவை வழங்குகிறது.
உலகளவில் அதிகப்படியான சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் நாடு தாய்லாந்து. இந்தியர்களின் விருப்பமான நாடாகவும் உள்ளது. அதேபோல் இந்தியர்களின் பட்ஜெட்டுக்கு ஏற்ற நாடாகவும் உள்ளதால் நண்பர்களுடனும், குடும்பத்துடனும் வெகேஷன் செல்ல தாய்லாந்து சிறந்த நாடாக உள்ளது. இரவு நேர கொண்டாட்டம், கோவில்கள், ஷாப்பிங், கடற்கரை சாகசங்கள், விதவிதமான உணவுகள் என ஜாலியாக என்ஜாய் பண்ணலாம். தாய்லாந்து அரசு இந்தியர்களுக்கு 60 நாட்கள் ஃப்ரீ விசா வழங்குகிறது. மேலும் சில நேரங்களில் 90 நாட்கள் ஃப்ரீ விசா சேவையும் வழங்குகிறது.


Click it and Unblock the Notifications