மலைகளின் அழகை ரோப் காரில் இருந்தபடியே ரசிக்கணுமா? இந்தியாவில் எங்கெல்லாம் ரோப் கார் சேவை உள்ளது? லிஸ்ட்!
இந்தியாவில் எங்கெல்லாம் ரோப் கார் சேவைகள் உள்ளன. இந்த சும்மருக்கு குடும்பத்துடன் எங்கெல்லாம் போகலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயற்கையின் அழகை கழுகு பார்வையில் பார்த்து ரசிக்கவேண்டிய சூப்பரான இடங்களில் சிக்கிம் உள்ளது. யாங்காங் சுற்றுலா தலத்தில் 3 கிலோமீட்டர் நீளமும், காங்டாக் சுற்றுலா தலத்தில் ஒரு கிலோமீட்டர் நீளத்திலும் ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சம்மருக்கு குடும்பத்துடன் என்ஜாய் பண்ண சிக்கிமில் உள்ள ரோப் கார் சேவையை ட்ரை செய்து பாருங்கள்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள குல்மார்க் மற்றும் பாட்னிடாப் ஆகிய இரு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அழகை கழுகு பார்வையில் பார்த்து ரசிக்கலாம்.
ஹிமாச்சலப்பிரதேசத்தில் மணாலி மற்றும் சிம்லா ஆகிய இரு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. இந்த சும்மருக்கு குடும்பத்துடன் ட்ரிப் செல்ல பிளான் பண்ணிருங்க.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள முசோரி மற்றும் அவுலி ஆகிய இரு சுற்றுலா தலங்களில் சுற்றுலா பயணிகளுக்காக ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. மலையின் அழகை ரசிக்க சூப்பரான இடமாகும்.
பீகார் மாநிலம் நாளந்தா சுற்றுலா தலத்தில் ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ரத்னகிரி மலையின் அழகை கழுகு பார்வையில் பார்த்து ரசிக்கலாம்.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் சுற்றுலா தலத்தில் ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. நீர்வீழ்ச்சி, பசுமையான மலைகளின் அழகை பார்த்து ரசிக்கலாம்.
குஜராத் மாநிலம் வதோதரா சுற்றுலா தலத்தில் ரோப் கார் சேவை வழங்கப்பட்டு வருகிறது. ஒரு கிலோமீட்டர் நீளம் கொண்ட ரோப் காரில் பயணித்துக்கொண்டே இயற்கையின் அழகை ரசிக்கலாம்.


Click it and Unblock the Notifications