இல்லத்தரசிகள் கொண்டாடிய சன் டிவி சீரியல்கள்.. அதிகம் பார்க்கப்பட்ட தொடர்களின் டாப் 5 லிஸ்ட்!
கடந்த வாரம் சன் டிவியில் அதிக பார்க்கப்பட்ட சீரியல்கள் என்னென்ன? அதிக டிஆர்பி ரேட்டிங் பெற்ற தொடர்கள் என்னென்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த வாரம் அதிகமான பார்வையாளர்களை ஈர்த்த சன் டிவி தொடர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் "மருமகள்" சீரியல் உள்ளது. கேப்ரியல்லா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் இத்தொடர் 8.24 ரேட்டிங் உடன் ஐந்தாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 4ம் இடத்தில் "கயல்" சீரியல் உள்ளது. நடிகை சைத்ரா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து ஒளிபரப்பாகி அதிகப்படியான இல்லத்தரசிகளை ஈர்த்து வரும் சீரியல் ஆகும். இத்தொடர் 8.77 டிஆர்பி ரேட்டிங் உடன் நான்காம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 3ம் இடத்தை 'எதிர்நீச்சல் 2' சீரியல் உள்ளது. எதிர்நீச்சல் முதல் பாகம் மாபெரும் வெற்றி கண்டதை தொடர்ந்து இரண்டாவது பாகம் அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அதன்படி இத்தொடர் கடந்த வாரம் 8.92 டிஆர்பி ரேட்டிங் உடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் 2ம் இடத்தில் 'மூன்று முடுச்சு' சீரியல் உள்ளது. கடந்த வாரம் இத்தொடர் 9.40 டிஆர்பி ரேட்டிங் உடன் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
இறுதியாக, தொடர்ந்து முதல் இடத்தை தக்கவைத்து வருகிறது 'சிங்கப்பெண்ணே'. இத்தொடர் கடந்த வாரம் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து 9.73 டிஆர்பி ரேட்டிங் உடன் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications