Home / Photos
வாஸ்து டிப்ஸ்: வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாத பொருட்கள் என்னென்ன.. மீறினால் என்னாகும்!
By Chandru
வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் தெற்கு பகுதியில் வைக்கவிடாத பொருட்கள் என்னென்ன? அதையும் மீறி வைத்தால் என்னாகும்? என்பதை இந்த பதிவில் டீடைலாக பார்ப்போம்.
1/6
Share
புது வீடு கட்டப்போகிறோம் என்றால் வாஸ்து சாஸ்திரம் மிகவும் முக்கியம். எந்தெந்த ரூம் எந்த திசையில் இருக்கவேண்டும், சமையல் அறை, குளியல் அறை, கிட்சன், பூஜை ரூம் உள்ளிட்டவை எந்தெந்த இடங்களில் இருக்கவேண்டும் என்பதை வாஸ்து பார்த்து வைப்பது மிகவும் முக்கியம்.
2/6
Share
அதுமட்டுமில்லாமல் எந்தெந்த பொருட்கள் வீட்டில் இருக்கவேண்டும், எந்த தேசாயை நோக்கி இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். இல்லாவிட்டால் வீட்டில் பல பிரச்சனைகள், பொருளாதாரரீதியான கஷ்டங்கள் உள்ளிட்ட பல விளைவுகளை ஏற்படுத்தும். அந்தவகையில் வீட்டின் தெற்கு திசையில் வைக்கக்கூடாத பொருட்கள் எவை எவை என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
3/6
Share
படுக்கையறை: மன நிம்மதிக்கும், உடல் ஆரோக்கியத்துக்கும் மிகவும் முக்கியம் தூக்கம். அப்படியான சுகமான தூக்கத்தை தருவது இந்த படுக்கையறை. ஓடியாடி உழைத்தபின் அப்பாடா என ஓய்வெடுப்பது இங்கே தான். இப்படியான இந்த படுக்கையறை வாஸ்து சாஸ்திரத்தின் படி வீட்டின் தெற்கு திசையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தில் பிரச்னை, திருமணம் ஆனவர்களுக்கு திருமண உறவுக்குள் பிரச்னை என பல இடையூறுகள் வந்து சேரும்.
4/6
Share
ஸ்டோர் ரூம்: வீட்டுக்கு தேவையான, தேவையில்லை பொருட்கள் அனைத்தும் ஒரே இடத்தில் கூடும் இடம் ஸ்டோர் ரூம். இந்த ஸ்டோர் ரூம் வீட்டின் தெற்கு திசையில் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் குடும்ப உறவினர்களிடையே விரிசல் ஏற்படும், குடும்ப வாழ்க்கைக்குள் பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும்.
5/6
Share
துளசி செடி: மிகவும் புனிதமானதாக கருதப்படும் இந்த துளசி செடி, வீட்டின் தெற்கு திசையில் வைக்காதீர்கள். அப்படி வைத்தால் பொருளாதாரரீதியாக மிகவும் சேரமப்படுவீர்கள்.
6/6
Share
காலணிகள்: வீட்டுக்கு வெளியே காலணிகளை வைத்தாலும் அதனை தெற்கு திசையில் வைக்கக்கூடாது. தெற்கு திசையானது நம் முன்னோர்களின் திசையாக கருதப்படுகிறது, ஆகவே அங்கு காலணிகளை வைப்பதன் மூலம் அவர்களை அவமானப்படுத்துவது போன்றதாகும்.


Click it and Unblock the Notifications