அப்போ எல்லாம் பொய்யா?" லியோ கலெக்ஷன் ரூ.600 கோடி இல்லையாம்? வெளிவந்த உண்மையான வசூல் நிலவரம்!
விஜய் நடிப்பில் வெளிவந்த லியோ திரைப்படம் ரூ.600 கோடி வசூல் செய்ததாக சொல்லப்பட்ட தகவல் பொய்யாகிப்போனது. அப்படத்தின் உண்மையான வசூல் நிலவரம் வெளியாகி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
விஜய்: தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்று ரசிகர்களால் அழைக்கப்படுபவர் விஜய். படம் மொக்கை வாங்கினாலும் வசூலில் மாஸ் காட்டிவிடுவார். அந்தளவிற்கு தனக்கென கோடிக்கணக்கான ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளார். அந்த வகையில் இவர் நடிப்பில் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த 'லியோ' மாபெரும் ஹிட்டானதாக தகவல் வெளிவந்தது.
லியோ: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், திரிஷா, அர்ஜுன், சஞ்சய் தத் உட்பட பல முன்னணி பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்த பிரமாண்ட திரைப்படம் 'லியோ'. லோகேஷ் கனகராஜின் எல்சியூ யூனிவர்சின் ஒரு பகுதியக லியோ வெளியானது. பல வருடங்களுக்கு பின்னர் த்ரிஷா-விஜய் கூட்டணி உருவானது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே உலகம் முழுவதும் ரிலீசான இப்படம் அமோக வரவேற்பு பெற்றது. இருப்பினும் படத்தை சுற்றி சில நெகட்டிவ் விமர்சனங்களும் வலம் வந்தன.
வசூல்: செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் வெளிவந்த இப்படம் உலகளவில் அதிகம் வசூல் செய்ததாக கூறப்பட்டது. விஜய்யின் திரை வாழ்க்கையில் அதிகம் வசூல் செய்த படங்களில் லியோ படமும் இணைந்தது. உலகளவில் சுமார் 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல் வெளியானது. வசூலை கேட்டு விஜய் ரசிகர்களும் பூரித்துப் போனார்கள்.
ட்விஸ்ட்: லியோவின் வசூல் 600 கோடி ரூபாய் என்றும் ரஜினியின் 'கூலி', லியோ பட கலெக்ஷனை முறியடிக்க மிகவும் போராடவேண்டியதிருக்கும் என்றெல்லாம் விமர்சிக்கப்பட்டது. இந்த இடத்தில் தான் ட்விஸ்ட் காத்திருந்தது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் வருமான வரி தாக்கல் செய்துள்ளார். அதில் லியோ படத்தின் உண்மையான வசூல் நிலவரம் வெளியாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது, குறிப்பாக விஜய் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது.
உண்மை வசூல் என்ன? லியோ 600 கோடி ரூபாய் வசூல் செய்ததாக கூறப்பட்டு வந்த நிலையில் அதன் உண்மையான வசூல் 404 கோடி ரூபாய் மட்டுமே என பட தயாரிப்பாளர் வருமான வரியில் குறிப்பிட்டிருந்தார். ரூ.200 கோடி அதிகமாக குறிப்பிட்டு வசூல் நிலவரத்தில் பொய்களை பரப்பியுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் விஜய் ரசிகர்கள் ஏமாற்றப்பட்டனர். இதனால் விஜய் ரசிகர்களும், நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் சரமாரியாக கேள்விகளை எழுப்பி வருகின்றனர். தற்போது இந்த தகவல் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications