Home / Photos
உதவி இயக்குநருடன் மலர்ந்த காதல்.. திருமணத்திற்கு பின் சினிமாவுக்கு பாய் சொன்ன 'லவ் டுடே' பட நடிகை.. இப்போ எப்படி இருக்காங்கனு பாருங்க!
By Chandru
90ஸ் கிட்ஸின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ராசி மந்த்ராவின் ரீசென்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.
1/8
Share
80ஸ் மற்றும் 90ஸ் காலகட்டத்தில் மக்களின் மனதில் குடியேறிய நடிகைகளின் சமீபத்திய புகைப்படத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்த நடிகை ராசி மந்த்ராவின் ரீசென்ட் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
2/8
Share
குழந்தை நட்சத்திரமாக தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராசி மந்த்ரா. பின்னர் தனது 19 வயதிலேயே ஹீரோயின் சான்ஸ் கிடைத்து, நடிகர் அருண் விஜய் நடிப்பில் வெளியான பிரியம் என்ற படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
3/8
Share
அப்படத்தை தொடர்ந்து லவ் டுடே படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து மக்களின் கவனத்தை ஈர்த்தார். குறிப்பாக இளைஞர்களின் மனதை கொள்ளையடித்தார், ராசி மந்த்ரா. இப்படத்தின் மூலம் தமிழில் நல்ல வ வரவேற்பு கிடைக்க தொடர்ந்து தமிழ் பட வாய்ப்புகள் தேடி வர தொடங்கியது.
4/8
Share
தொடர்ந்து தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கத் தொடங்கினார். இதன் மூலம் தமிழ் சினிமாவின் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வர தொடங்கினார். அதேபோல் படங்களில் அதிக கிளாமர் காட்டி நடித்து ஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தையும் தன்வசப்படுத்தியவர், ராசி மந்த்ரா.
5/8
Share
ஒருகட்டத்தில் இளைஞர்களின் கனவுக்கன்னியாக மாறிய ராசி மந்த்ராவுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உருவானது. அதுவும் மீனா, சுகன்யா, சௌந்தர்யா, நக்மா உள்ளிட்ட டாப் நடிகைகள் தமிழ் சினிமாவை ஆட்சிசெய்து வந்த நிலையில் தனக்கென தனி இடத்தை அமைத்துக்கொண்டார்.
6/8
Share
தமிழில் சுமார் 30க்கும் மேற்பட்ட படங்களில் கலக்கிய ராசி மந்த்ரா, பிற மொழி படங்களிலும் முன்னணி நடிகையாகவும், கவர்ச்சி நாயகியாகவும் மக்களின் மனதை கொள்ளையடித்தார். குறிப்பாக தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகையாக வலம் வந்தார்.
7/8
Share
தமிழ், தெலுங்கு படங்களை தொடர்ந்து கன்னடம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட படங்களிலும் தனது அசத்தலான நடிப்பினை வெளிப்படுத்து தென்னிந்தியாவின் கலக்கல் நாயகியாக வலம் வந்தார். இப்படி குறிகிய காலத்தில் தென்னிந்தியாவின் முன்னணி நடிகையாக மக்களை ஈர்த்த ராசி மந்த்ரா, என்ன நினைத்தாரோ திடீரென திருமண வாழ்க்கைக்குள் ஐக்கியமாகிவிட்டார்.
8/8
Share
இவர் தனது 29 வது வயதில் உதவி இயக்குநர் ஸ்ரீமுனி என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து கொஞ்சம் கேப் எடுத்துக்கொண்ட ராசி மந்த்ரா, அவ்வப்போது ஒரு சில படங்களில் மட்டும் தென்பட்டு வந்தார். இளைஞர்களின் கனவுக்கன்னியாக இருந்து ராசி மந்த்ராவின் ரீசென்ட் புகைப்படங்கள் இணையத்தளத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு செம ஷாக் கொடுத்துள்ளது. "எவ்ளோ ஸ்லிம்மா இருந்தாங்க, இப்படி வெயிட் போட்டு ஆளே மாறிட்டாங்களே" என்று கமெண்ட் செய்து ராசி மந்த்ராவின் லேட்டஸ்ட் புகைப்படங்களை வைரல் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications