கல்யாண களை வந்திருச்சே.. விஷால் - சாய் தன்ஷிகா நிச்சயதார்த்தம்.. போட்டோஸ்!
விஷால் - சாய் தன்ஷிகாவின் நிச்சயதார்த்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
விஷால்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஷால். ரசிகர்களால் புரட்சி தளபதி என கொண்டாடப்படுகிறார். 'செல்லமே' படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்த இவர், சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, மலைக்கோட்டை, சத்யம், தோரணை, அவன் இவன் என தொடர் ஹிட் படங்களை கொடுத்து தமிழ் சினிமாவில் தனக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். தற்போது 'மகுடம்' என்ற படத்தில் நடித்து வருகிறார்.
நடிகர் சங்கம்: ஸ்டார் நடிகராக ஜொலித்து வரும் விஷால், தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு பொதுச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். தென்னிந்திய நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதை தனது மிக பெரிய வாழ்கை லட்சியமாக வைத்திருந்தார். அதன்படி நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடித்தபின்னர் திருமணம் செய்துகொள்வேன் என கூறியிருந்தார்.
சர்பரைஸ்: கட்டிடம் கட்டிய பின்னரே திருமணம் என சொல்லிக்கொண்டிருந்த விஷால், பட விழா ஒன்றில் நடிகை சாய் தன்ஷிகாவை காதலிப்பதாகவும், விரைவில் இருவரும் திருமணம் செய்யப்போவதாகவும் கூறி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
கட்டிடம் கட்டியாச்சா? திருமணம் அறிவிப்பை தொடர்ந்து நடிகர் சங்க கட்டிட கட்டுமான பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இருப்பினும் பணிகள் முழுமையாக முடியாத நிலையில் விஷால் நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து மீண்டும் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.
நிச்சயதார்த்தம்: கட்டிட பணிகள் முழுமையாக நிறைவடையாத நிலையில் சென்னை அண்ணா நகரில் உள்ள விஷால் இல்லத்தில் விஷாலுக்கும் சாய் தன்ஷிகாவுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இருவீட்டார் முன்னிலையில் மிகவும் சிம்பிளாக இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
கல்யாணமா? கட்டிடமா? கட்டிடம் கட்டிய பின்னரே திருமணம் என்று உறுதியாக இருந்த விஷால், இன்னும் கட்டிட பணிகள் நிறைவடையாத நிலையில் முதலில் திருமணம் செய்வாரா? அல்லது கட்டிடம் கட்டி முடித்த பின்னர் திருமணம் செய்வாரா? என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
வாழ்த்துமழை: விஷாலின் நிச்சயதார்த்த போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாக வரும் நிலையில் பிரபலங்கள், ரசிகர்கள் விஷாலுக்கு வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர். தற்போது விஷால்-சாய் தன்ஷிகா நிச்சயதார்த்த போட்டோஸ் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications