Home / Photos
PHOTOS : தொகுப்பாளர் ரக்ஷனின் காதல் மனைவி மற்றும் குழந்தையை பாத்துருக்கீங்களா? புகைப்படங்கள் இதோ..
By Chandru
பல திறமைகளை வைத்துக்கொண்டது சரியான மேடையாக காத்திருந்த பல கலைஞர்களை மேடையேற்றி அழகு பார்த்தது விஜய் தொலைக்காட்சி. அன்று முதல் இன்று வரை பல திறமையாளர்களை வருடா வருடம் சல்லடை போடு தேடி அவர்களின் தனி திறமைகளை தொலைக்காட்சியின் வாயிலாக உலகிற்கு காண்பித்து வருகிறது.
1/7
Photo Credit: instagram
Share
பல திறமைகளுடன் சரியான மேடை இல்லாமல் தவித்த பல கலைஞர்களை மேடை ஏற்றி அழகு பார்த்தது விஜய் தொலைக்காட்சி. அன்று முதல் இன்று வரை பல திறமையாளர்களை வருடா வருடம் சல்லடை போடு தேடி அவர்களின் தனி திறமைகளை தொலைக்காட்சியின் வாயிலாக உலகிற்கு காண்பித்து வருகிறது.
2/7
Photo Credit: instagram
Share
விஜய் டிவியில் கலக்கிய பல கலைஞர்கள் தற்போது வெள்ளித்திரையில் கலக்கி கொண்டு வருகின்றனர். குறிப்பாக சொல்லப்போனால் சிவகார்த்திகேயன், ரோபோ சங்கர், சந்தானம், மா.கா.பா, பழைய ஜோக் தங்கதுரை, என்னம்மா ராமர், குக் வித் கோமாளி புகழ் என சொல்லிக்கொண்டே போகலாம்.
3/7
Photo Credit: instagram
Share
அந்தவகையில் 'கலக்க போவது யாரு சீசன் 5' மூலம் விஜய் டிவியில் தொகுப்பாளராக ரக்ஷன் அறிமுகமானார். இவர் தொகுப்பாளினி ஜாக்குலின் உடன் சேர்ந்து நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். தனது கலகப்பான பேச்சினால் நிகழ்ச்சியை அசத்தலாக கொண்டு சென்று ரக்ஷன், அடுத்தடுத்து வந்த சீசன்களையும் தொகுத்து வழங்கினர்.
4/7
Photo Credit: instagram
Share
அதேபோல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் முதல் சீசனில் இருந்து தற்போதைய சீசன் வரை ரக்சனே தொகுத்து வழங்கி வருகிறார். தொலைக்காட்சியில் தொகுப்பாளனாக மட்டுமல்லாமல் ரக்ஷன் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
5/7
Photo Credit: instagram
Share
'என் காதல் தேவதை' எனும் படத்தில் நடித்த ரக்ஷனுக்கு இப்படம் பெரியளவில் பேசப்படவில்லை. பின்னர் கடந்த 2020ஆம் ஆண்டு துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தில் துல்கர் சல்மானின் நண்பனாக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் இவரது நடிப்பிற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
6/7
Photo Credit: instagram
Share
இதைத்தொடர்ந்து ரக்ஷன் புதிய படமொன்றில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இயக்குநர் யோகேந்திரன் இயக்க, இந்த படத்திற்கு 'மறக்குமா நெஞ்சம்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
7/7
Photo Credit: instagram
Share
இப்படியாக தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் கலக்கும் ரக்ஷனுக்கு சரண்யா என்பவருடன் காதல் திருமணம் ஆனது. இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தையும் உள்ளது. ரக்ஷன் தனது குடும்பத்துடன் எடுத்துக் கொண்ட சில புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications