சினிமா டூ அரசியல்.. முதல் தேர்தலில் திரை பிரபலங்கள் வாங்கிய வாக்கு சதவீதம்.. எவ்வளவு?
சினிமாவில் ஜொலித்த பிரபலங்கள் அரசியலில் களமிறங்கி தங்களது முதல் தேர்தலில் போட்டியிட்டு வாங்கிய வாக்கு சதவீதம் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
எம்ஜிஆர்: 1972ல் திமுகவில் இருந்து வெளியேறிய எம்ஜிஆர், 1977ம் ஆண்டு தனி கட்சி தொடங்கி முதல் தேர்தலை எதிர்கொண்டார். அவர் தனது முதல் தேர்தலில் 30.4 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியமைத்தார்.
என்டிஆர்: தமிழ்நாட்டில் எம்ஜிஆர் போல் ஆந்திராவில் என்டி ராமாராவ். தெலுங்கு தேசம் என்ற கட்சியை தொடங்கிய ராமாராவ், தனது முதல் தேர்தலில் 46.2 சதவீத வாக்குகள் பெற்று ஆட்சியமைத்தார். முதல் தேர்தலில் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
விஜயகாந்த்: தமிழ் சினிமாவில் உட்சபட்ச நடிகராக இருந்த விஜயகாந்த், 2006ம் ஆண்டு தேமுதிக கட்சி தொடங்கி தனித்து தேர்தலை எதிர்கொண்டார். அதன்படி முதல் தேர்தலில் போட்டியிட்டு 8.5 சதவீத வாக்குகள் பெற்றார்.
சிரஞ்சீவி: தெலுங்கு சினிமாவில் ஸ்டார் நடிகராக வலம் வருபவர் நடிகர் சிரஞ்சீவி. ஆந்திர அரசியலில் என்டிஆர் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை போல் 2009ம் ஆண்டு ஆந்திர அரசியலில் சிரஞ்சீவி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். அதன்படி இவர் முதல் தேர்தலில் 16.3 சதவீத வாக்குகள் பெற்றார்.
பவன் கல்யாண்: ஆந்திர அரசியலில் மூன்றாவதாக கால்பதித்த திரை பிரபலம் பவன் கல்யாண். ஜனசேனா என்ற கட்சியை தொடங்கி 2019ல் தேர்தலில் போட்டியிட்டார். தனது முதல் தேர்தலில் 17 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு அதாவது 5.53 சதவீத வாக்குகள் பெற்றார். தற்போது ஆந்திராவின் துணை முதலமைச்சராக உள்ளார்.
கமல்: இந்திய சினிமாவின் முக்கிய முகமாக பார்க்கப்பட்ட கமல், மக்கள் நீதி மையம் என்ற கட்சியை தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு 5.53 சதவீத வாக்குகள் பெற்றார்.
சீமான்: இயக்குநரும், நடிகருமான சீமான், நாம் தமிழர் என்ற கட்சியை தொடங்கி 2016 சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டார். முதல் தேர்தலில் சீமான் 1.10 சதவீத வாக்குகள் பெற்றார்.
விஜய்: தமிழ் சினிமாவின் ஸ்டார் நடிகரான விஜய், கட்சி தொடங்கி இரண்டே ஆண்டுகளில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு மாபெரும் வெற்றி பெற்றுள்ளார். தற்போது நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 34.94 சதவீத வாக்குகள் பெற்று மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.


Click it and Unblock the Notifications