OTT: தமிழ்நாட்டில் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்.. ஓடிடியில் பார்க்கவேண்டிய சுவாரசிய பொலிடிகல் திரில்லர் படங்கள்.. என்னென்ன? லிஸ்ட்!
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில் இந்த வீக் எண்டு ஓடிடியில் பார்க்கவேண்டிய சுவாரசிய பொலிடிகல் திரில்லர் தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், பகத் பாசில் நடிப்பில் 2023ல் வெளிவந்த பொலிடிகல் திரில்லர் திரைப்படம் 'மாமன்னன்'. இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சூர்யா, சாய் பல்லவி நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் 2019ல் வெளிவந்த பொலிடிகல் திரில்லர் திரைப்படம் 'என் ஜி கே'. இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் ஆஹா ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
சத்யராஜ், கவுண்டமணி, மீனா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் 1994ல் வெளிவந்த திரைப்படம் 'தாய் மாமன்'. இப்படத்தை யூடியூப் தளத்தில் காணலாம்.
ஷங்கர் இயக்கத்தில் அர்ஜுன் நடிப்பில் 1999ல் வெளிவந்த தரமான பொலிடிகல் திரில்லர் திரைப்படம் 'முதல்வன்'. இப்படத்தை யூடியூப், அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
தனுஷ், திரிஷா நடிப்பில் 2016ல் வெளிவந்த ஆக்ஷன், பொலிடிகல் திரில்லர் திரைப்படம் 'கொடி'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
யோகி பாபு நடிப்பில் 2021ல் வெளிவந்த காமெடி, பொலிடிகல் ட்ராமா திரைப்படம் 'மண்டேலா'. ஓட்டின் அவசியத்தை பற்றிய திரைப்படமாகும். இப்படத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஆர்ஜே பாலாஜி நடிப்பில் 2019ல் வெளிவந்த காமெடி, பொலிடிகல் ட்ராமா திரைப்படம் 'LKG'. இப்படத்தை ஆஹா மற்றும் சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
ஜீவா, அஜ்மல் அமீர், கார்த்திகா நாயர் உள்ளிட்டோர் நடிப்பில் 2011ல் வெளிவந்த பொலிடிகல் திரில்லர் திரைப்படம் 'கோ'. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் அமேசான் பிரைம் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.
மணிரத்னம் இயக்கத்தில் சூர்யா, மாதவன், சித்தார்த் உள்ளிட்டோர் நடிப்பில் 2004ல் வெளிவந்த திரைப்படம் 'ஆயுத எழுத்து'. இப்படத்தை சன் நெக்ஸ்ட் ஓடிடியில் பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.


Click it and Unblock the Notifications