Home / Photos
கொட்டி கிடக்கும் ஆரோக்கியம்.. கருப்பு கவுனி அரிசியை உண்பதால் இத்தனை நன்மைகளா!
By Divya Bala
அரிசியால் செய்யப்படும் உணவுகளையே நாம் அன்றாட உணவுகளில் எடுத்துக்கொள்கிறோம். அதிகப்படியாக அரிசி உணவுகளை உண்பதால் பலவித உடல் வியாதிகள் ஏற்படுகின்றன. அதற்க்கு பதிலாக கருப்பு கவுனி அரிசியை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1/6
Photo Credit: AI
Share
இதய பராமரிப்பு: கருப்பு கவுனி அரிசியில் இருக்கும் நோய் எதிர்ப்பு சக்திகள் இதய நோய் ஏற்படாமல் பாதுகாக்கிறது. இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
2/6
Photo Credit: AI
Share
உடல் எடை: எடை குறைக்க முயல்பவர்கள் பொதுவாக இந்த கவுனி அரிசிகளை உணவில் சேர்த்துக்கொள்கிறார்கள். இதில் இருக்கும் சத்துக்கள் உடல் எடை அதிகரிக்காமல் கொழுப்புகளை கரைக்கவும் உதவுகின்றன.
3/6
Photo Credit: AI
Share
குடல் ஆரோக்கியம்: இதயம், கல்லீரல், குடல் என இவற்றிற்கு ஆரோக்கியத்தை அள்ளி கொடுக்கின்றன. மேலும் இவை செரிமானத்தை சீராக வைத்துக்கொள்கின்றன.
4/6
Photo Credit: AI
Share
சர்க்கரை அளவு: வெள்ளை அரிசி உண்பதால் முதலில் பலரும் பாதிக்கப்படுவது இந்த சர்க்கரை நோயால் தான். கவுனி அரிசியில் மிகவும் குறைவான அளவு இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்க உதவுகின்றன.
5/6
Photo Credit: AI
Share
மூளை வளர்ச்சி: கருப்பு கவுனி அரிசியில் ஆன்தோசயனின்ஸ் அதிக அளவில் இருப்பதால் மூளை வளர்ச்சியை அதிகரிப்பதோடு நினைவாற்றலையும் கூட்டுகிறது.
6/6
Photo Credit: AI
Share
கல்லீரல்: வெள்ளை அரிசியில் இருக்கும் கார்போ சத்துக்கள் கல்லீரலில் சேரும் நச்சுக்களை தடுப்பதில்லை. ஆனால் கவுனி அரிசியில் இந்த நச்சுக்களை வெளியேற்றும் சத்துக்கள் உள்ளன. இஇதனால் கல்லீரல் ஆரோக்கியமாக உள்ளன.


Click it and Unblock the Notifications