Home / Photos
மலையாளத்தை கலக்கும் டாப் இளம் நடிகைகள்.. வாங்கும் சம்பளம் எவ்வளவுன்னு தெரியுமா? லிஸ்ட்!
By Chandru
தமிழ் சினிமா எத்தனையோ மலையாள நடிகைகளை ஈர்த்துள்ளது. நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமலா பால், அபர்ணா பாலமுரளி, ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் மலையாள சினிமாவில் இருந்து தமிழில் அறிமுகமாகி ஜொலித்தவர்கள். அந்த வகையில் மலையாள சினிமாவை கலக்கும் டாப் இளம் நடிகைகள் யார்? அவர்களின் சம்பளம் எவ்வளவு? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/5
Photo Credit: filmibeat
Share
மலையாள நடிகையான அனஸ்வரா ராஜன், 'வித் லவ்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். குறைவான பட்ஜெட்டில் உருவாகி வசூலிலும், விமர்சனத்திலும் மெகா ஹிட்டானது. தொடர்ந்து ஜிவி பிரகாஷ் நடிப்பில் வெளிவந்த 'லக்கி தி சூப்பர் ஸ்டார்' படத்திலும் நடித்திருந்தார். மக்கள் மனம் கவர்ந்த இவர், தமிழ் சினிமாவில் இளம் நடிகையாக வலம் வருகிறார். தற்போது இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 75 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார் .
2/5
Photo Credit: filmibeat
Share
இளம் மலையாள நடிகையான மாளவிகா மனோஜ், ரியோ நடிப்பில் வெளிவந்த 'ஜோ' படத்தில் நாயகியாக நடித்து தமிழ் சினிமாவில் கொடுத்தார். முதல் படத்திலேயே இளைஞர்கள் மனதை கொள்ளையடித்த இவர், ஆண் பாவம் பொல்லாதது படத்திலும் நாயகியாக நடித்தார். தமிழ் சினிமாவின் இளம் நடிகையான இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 50 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார் .
3/5
Photo Credit: filmibeat
Share
தமிழ் சினிமாவில் இளைஞர்களின் பேவரைட் நடிகையாக வலம் வருபவர் நடிகை அனிஷ்மா அனில்குமார். விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவந்த 'சிறை' படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார். முதல் படத்திலேயே இளைஞர்கள் கூட்டத்தை கவர்ந்த இவர், கென் இயக்கத்தில் வெளிவந்த 'யூத்' படத்தில் முக்கிய ரோலில் நடித்தார். இளைஞர்கள் கொண்டாடும் இளம் நடிகையான இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 30 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்.
4/5
Photo Credit: filmibeat
Share
குறுகிய காலத்தில் இளைஞர்கள் மனம் கவர்ந்தவர் நடிகை மமிதா பைஜூ. மலையாளம் மற்றும் தமிழில் மிகப்பெரிய ஃபேன்ஸ் கூட்டத்தை கொண்டுள்ள இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார். தற்போது மூன்று தமிழ் படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.
5/5
Photo Credit: filmibeat
Share
இளம் மலையாள நடிகையன அன்னா பென், 'கும்பளங்கி நைட்ஸ்' படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமாகி தற்போது ஸ்டார் இளம் நடிகையாக ஜொலித்து வருகிறார். சூரியின் 'கொடுக்காளி' படத்தில் முக்கிய ரோலில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஸ்டார் இளம் நடிகையான இவர், படம் ஒன்றில் கமிட்டாகி நடிக்க சுமார் 50-75 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications