Arisi Paruppu Saadham: மணமணக்கும் கோவை ஸ்பெஷல் அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி தெரியுமா?
அரிசி பருப்பு சாதம்: கொங்குநாட்டு உணவு வகைகளுக்கு என்று தனி ருசி உள்ளது. குறிப்பாக கோவை என்றாலே முதலில் நியாபகத்துக்கு வருவது அரிசிபருப்பு சாதம்தான். சூடாகவும், சுவையாகவும், சிம்பிளாகவும் செய்யக்கூடிய அரிசிபருப்பு சாதம் எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
கோவையில் அரிசி பருப்பு சாதம் மிகவும் ஸ்பெஷலான உணவாகும். வீட்டிற்குத் திடீரென உறவினர்கள் வந்துவிட்டால், இரவில் மழை வந்தால், பரப்பாக இருக்கும் நாளில் சிம்பிளான உணவு செய்ய வேண்டும் என்றால் எல்லோரின் சாய்ஸும் கண்டிப்பாக இந்த அரிசி பருப்பு சாதமாகத்தான் இருக்கும். வெறும் 15 நிமிடங்களில் சூடாக சுவையாக சமைத்து பரிமாறக் கூடிய அரிசி பருப்பு சாதம் செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
அரிசி - 1 கப்
துவரம் பருப்பு - அரை கப்
சமையல் எண்ணெய் தேவையான அளவு
சீரகம் - கால் டேபிள் ஸ்பூன்
கடுகு - கால் டேபிள் ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 6 பல்
தக்காளி - 2
பெருங்காயத்தூள் - கால் டேபிள் ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் - அரை டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
அரிசி பருப்பு சாதம் செய்வது எப்படி?
1. முதலில் அரிசி மற்றும் துவரம்பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
2. அடுப்பில் குக்கரை வைத்து தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும். கடுகு தாளித்த பின்னர் சீரகம், கறிவேப்பிலை, வரமிளகாய், நறுக்கி பெரிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிக் கொள்ளவும்.
3. வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி, பூண்டு, மஞ்சள் தூள், பெருங்காயத் தூள், உப்பு, சாம்பார் தூள் ஆகியவற்றை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
4. அனைத்துப் பொருள்களையும் நன்கு வதக்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீரை ஊற்றி கொதிக்கவிடவும்.
5. நன்கு கொதித்த பின்னர் அரிசி மற்றும் பருப்பை சேர்த்து குக்கரை மூடி வைத்து விசில் விட்டு காத்திருக்கவும். விசில் போனதும் கொத்தலமல்லி இலை தூவி இறக்கவும். சூடான சுவையான அரிசி பருப்பு சாதம் ரெடி.
அரிசி பருப்பு சாதத்துடன் அப்பளம், பருப்புச் சட்னி வைத்து சாப்பிட்டால் அட்டகாசமாக இருக்கும். இந்த எளிமையான, குறைந்த நேரத்தில் சமைக்கக் கூடிய அரிசி பருப்பு சாதத்தை சமைத்து பாருங்க
-
உச்ச நீதிமன்றத்தில் நேரடியாக நீதிபதியான 2-வது பெண் வழக்கறிஞர்! கோவையை சேர்ந்த மோகனா.. பின்னணி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications