ஆடி அமாவாசை.. தீபாவளி காசி கயா ஆன்மீக யாத்திரை.. திருச்சியில் இருந்து IRCTC சிறப்பு விமான சுற்றுலா
திருச்சி: இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC யானது திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆகஸ்ட் 15 ஆடி அமாவாசையை முன்னிட்டு காசி, கயா, அலகாபாத் மற்றும் அயோத்தியா நகரங்களுக்கு ஆன்மீக சுற்றுலாவை ஐஆர்சிடிசி அறிமுகப்படுத்தியுள்ளது. தீபாவளி பண்டிகைக்கும் 13 நாட்கள் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
காசிக்கு புனித பயணம் செல்ல வேண்டும் என்று பலரும் விரும்புவார்கள் அவர்களுக்காகவே பாரத் கவுரவ் யாத்திரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. காசி, கயா, அயோத்திக்கு விமானம் மூலம் சுற்றுலா ஏற்பாடு செய்துள்ளது ஐஆர்சிடிசி. ஆடி அமாவாசை, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த ஆன்மீக சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC - யானது சிறப்பு ரயில், கல்வி சுற்றுலா, விமான பயணத் திட்டத்தை வகுத்து, இந்தியா முழுவதும் அருமையான சுற்றுலாக்களை அறிமுகப்படுத்தி ஏற்பாடு செய்து நடத்தி வருகிறது . இதனைத் தொடர்ந்து திருச்சியில் இருந்து விமான சேவை மூலம் சிறப்பு சுற்றுலா திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.
இதில் 1- காசி கயா சிறப்பு யாத்திரை, ( காசி, கயா, அலகாபாத் மற்றும் அயோத்தியா) - 7 நாட்கள் சுற்றுலா சேவை , தனி நபர் ஒருவருக்கு ரூபாய், 40,500 ஆகும். இதேபோல் 2- சார்தாம் யாத்திரை - ( கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்திரி,ரிஷிகேஷ், மற்றும் ஹரித்வாரி) - 13 நாட்கள் சுற்றுலா சேவை தனிபர் ஒருவருக்கு ரூபாய் 68,150 என இரண்டு சுற்றுலா சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சுற்றுலா சேவையில் விமான கட்டணம், உள்ளூர் போக்குவரத்து, தங்கும் விடுதி , உணவு, சுற்றுலா மேலாளர், பயண காப்பீடு, ஜி .எஸ். டி ஆகியவை உள்ளடக்கியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பாக பயணம் மேற்கொள்ள IRCTC முழுமையாக ஒத்துழைக்கும்.
1- காசி கயா சிறப்பு யாத்திரை:
11.08.2023 தேதி காலை 8.30 மணியளவில் திருச்சியில் இருந்து புறப்பட்டு 17.08.2023 ஆம் தேதி மீண்டும் திருச்சியை வந்தடைகிறது.
Day 1- திருச்சி - அயோத்தியா சென்றடைந்துடன் இரவு தங்குதல்,
Day 2- அயோத்தியாவில் உள்ள கோவில் மற்றும் சுற்றுலா தளங்களை பார்த்துவிட்டு இரவு அலகாபாதில் தங்குதல்.
Day 3- அலகாபாத் இருந்து வாரணாசி செல்லும் வழியில் உள்ள சுற்றுலா தலங்கள் பார்வையிட்ட பிறகு இரவு வாரணாசியில் தங்குதல்,
Day 4- வாரணாசியில் உள்ள ஆன்மீக சுற்றுலா தளங்களை பார்வையிட்ட பிறகு இரவு மீண்டும் வாரணாசியில் தங்குதல்.
Day 5- வாரணாசி வாரணாசியில் இருந்து புறப்பட்டு கயா சென்று, இரவு தங்குதல்.
Day 6- கயா பகுதியில் உள்ள ஆன்மீக தலங்களை சுற்றிப் பார்த்துவிட்டு இரவு மீண்டும் கயாவில் தங்குதல்.
Day 7 - கயாவில் இருந்து புறப்பட்டு பாட்னா விமான நிலையம் சென்று அங்கு இருந்து விமான மூலம் திருச்சி வந்தடைதல்.
இந்த 7 நாள் சுற்றுலாவிற்கு தனி நபருக்கு 49,500 ரூபாய், இரண்டு பேர் என்றால் 81,000 ரூபாய், மூன்று பேர் என்றால் 1,15800 ரூபாய் என பயண தொகையை நிர்ணையத்துள்ளது.

மேலும் இதே போன்று 13 நாட்களுக்கான சுற்றுலா 27- 10- 2023 அன்று திருச்சியில் இருந்து புறப்பட்டு 8-11-2023 அன்று மீண்டும் திருச்சி வந்தடைகிறது . இதில் தனிநபருக்கு 80,900 ரூபாய் ஆகும். இந்த சுற்றுலா அனைத்தும் covid-19 விதிகள் உட்பட்டு அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றி செயல்படுத்தப்படும் என இந்திய ரயில்வே சுற்றுலா பிரிவின் IRCTC யானது தெரிவித்துள்ளது.
மேலும் விபரங்களுக்கு தொடர்ப்பு எண்கள் :
திருச்சி _ 8287932070
மதுரை - 8287931977, 8287932122
சென்னை - 9003140682, 9003140680, 8287931964
இணையதளம் முகவரி - www.irctctourism.com , தொடர்ப்பு கொள்ளவும் என IRCTC தெரிவித்துள்ளது.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications