மாதவிடாய் நேரத்தில் "கருப்பு" பொட்டு வைக்கணுமா? பெண்களின் நெற்றி கறுப்பு பொட்டில் இத்தனை விஷயமா? பலே
சென்னை: குழந்தைகளுக்கு கருப்பு கலரில் பொட்டு வைக்கிறோம்.. அதேபோல, பெண்கள் கருப்பு கலரில் பொட்டு வைக்கக்கூடாது என்கிறோம்.. என்ன காரணம்? இதற்கும் அறிவியல் மற்றும் ஆன்மீக காரணங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
கருப்பு நிறங்கள் மனதில் நேர்மறை சக்தியை அதிகரிக்கக்கூடியவை.. பெரும்பாலும், கருப்பு நிறங்கள், சூரிய ஒளியில் இருந்து வரும் கதிர்களை உள்வாங்கிக் கொள்ளும் தன்மை கொண்டது..
சிவப்பு நிறம்: சிவப்பு நிறம் செவ்வாய் கிரகத்துடன் தொடர்புடையதுபோல, சனியின் நிறம் கருப்பு ஆகும்.. எனவே, சனி கிரகத்துடனும், கருப்பு பொட்டு தொடர்புப்படுத்தப்படுகிறது.

திருமணமான பெண்கள் சிவப்பு, பச்சை, மஞ்சள், நீலம், ஆரஞ்சு, என எந்த நிறத்திலும் பொட்டு வைக்கலாம். ஆனால் கருப்பு நிறத்தில் மட்டும் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். காரணம், கருப்பு நிறம் சனி மற்றும் ராகு இருவரது நிறமாக கருதப்படுகிறது. எனவே, குடும்பத்தில் பலசிக்கல்கள் வரக்கூடுமாம். தகராறுகளை அதிகரிக்க செய்வதுடன், உறவுகளிடமுள்ள நல்லிணக்கத்தையும் சிதைத்துவிடுமாம்.
கருப்பு பொட்டுக்கள்: திருமணமான பெண்களுக்கு, உடல் ரீதியாகவும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுவது இயல்பு.. எனவே, திருமணத்தின் பிறகு, கருப்பு பொட்டு வைத்தால் அது பெண்களை நோக்கி எதிர்மறை சக்தியை ஈர்க்கிறது என்றும் நம்பப்படுகிறது.. இதனாலேயே மணம் முடித்த பெண்கள் கருப்பு நிற பொட்டுக்களை வைக்க வேண்டாம் என்கிறார்கள்.
அதுமட்டுமல்லாமல், ஜோதிட சாஸ்திரம்படியும், கருப்பு பொட்டு எதிர்மறை ஆற்றல் நெற்றியில் சேர்க்கப்பட்டு, உடல் முழுவதும் பரவத் தொடங்குகிறது.. எனவே, கருப்பு நிறத்தில் பொட்டு வைப்பதை சாஸ்திரங்களும் ஊக்குவிக்கப்பதில்லை. அப்டிபயே கருப்பு பொட்டி வைக்க வேண்டுமானால், தனியாக பயன்படுத்தாமல், வேறு நிறத்துடன் கலந்து பயன்படுத்தினால், எதிர்மறையான விளைவுகள் ஏற்படாது என்கிறார்கள்.
மாதவிடாய்: பொதுவாக, மாதவிடாய் சமயத்தில் கருப்பு பொட்டு வைத்து கொள்ளலாம்.. இதன்காரணமாக, துஷ்ட சக்திகள் அந்த நேரங்களில் உங்களை அணுகாமல் பாதுகாக்கப்படும்.. திருஷ்டி படக்கூடாது என்பதற்காகவே, குழந்தைகளுக்கும் கருப்பு நிறத்தில் பொட்டு வைக்கிறார்கள். எனவே, கருப்பு பொட்டு வைப்பதில் தவறில்லை என்றும் சொல்கிறார்க்ள.
அதேபோல, கணபதி ஹோமத்திற்கு யாக சாலையிலிருந்து எடுக்கப்பட்ட சாம்பலையும், நெய்யையும் கலந்து தயாரிக்கப்பட்ட கரிபிரசாதத்தை நெற்றியில் வைத்து கொள்ளலாம். ஆனால், கோயில்களில் விளக்குகளில் காணப்படும் கருப்பு கரியை நெற்றியில் வைத்துக் கொள்ள கூடாதாம்.
சிவப்பு நிறம்: எனவே திருமணமானவர்கள் சிவப்பு நிறத்தில் தான் பொட்டு வைக்க வேண்டும். அதிலும், 2 புருவத்திற்கு இடையிலும், நெற்றியின் வகிடுலும் குங்குமம் வைக்க வேண்டும்.. நெற்றியின் வகுட்டிலும் பொட்டு வைக்க வேண்டும்.. காரணம், நெற்றியில் உள்ள பிட்யூட்டரி நரம்புகளை தூண்டுவதன் மூலம் குழந்தை பேறு உடனடியாக கிடைக்கும் என்பதற்காகதான் நெற்றி வகிட்டில் பொட்டு வைக்க சொல்கிறார்கள்.
விரலி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் போன்றவை அனைத்தும் சேர்த்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணெய்யும், எலுமிச்சம் பழம் சேர்த்து தயாரிக்கப்படுவதே குங்குமம்.
கிருமிநாசினி: மஞ்சளும், காரமும் வேதிவினை புரிவதால் இந்த சிவப்பு நிறம் கிடைக்கிறது.. குங்குமம் ஒரு சிறந்த கிருமி நாசினி என்றே சொல்லலாம்.. நச்சு நுண்ணுயிரிகள் மற்றும் பூஞ்சைகளை அழிக்கும் சக்தி உள்ளதால், தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் நம்மை அண்டாது..
2 புருவங்களுக்கு இடையிலுள்ள நெற்றி பொட்டில் சிந்தனை நரம்புகள் ஒன்றாக கூடும் இடமாக உள்ளன.. அங்கு, மெதுவாக விரலால் தொடும் போது மனதில் மெல்லிய உணர்வு ஏற்படும். அதுமட்டுமல்ல, குங்குமத்தை வைப்பதால் ஹிப்னாட்டிஸம் போன்ற எதிர்மறை சக்திகள் செயல்படுவதில்லை என்றும் சொல்லப்படுகிறது. எனவேதான், பெண்களை கட்டாயம் குங்குமம் வைக்க சொல்கிறார்கள்.
-
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா?












Click it and Unblock the Notifications