Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அயோத்தி அரசன் ராமன்.. வில்லேந்தி நின்றது ஏன்? வெற்றிக்குறியீடு சொல்லும் உண்மை

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜோதிடத்தில் ஒருவர் பிறந்த ஜென்ம நட்சத்திரத்திற்குரிய வடிவங்களை தினமும் பார்த்து வந்தாலோ அல்லது பயன்படுத்தி வந்தாலோ வாழ்க்கையில் எளிதில் வெற்றியடையலாம் என்று ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. பகவான் ஸ்ரீராமர் தனது கைகளில் எப்போது வில்லும் அம்பும் வைத்துக்கொண்டிருந்து. அதன் குறியீடு என்ன என்று பார்க்கலாம்.

பகவான் ஸ்ரீராமரின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசமாகும். புனர்பூசம் நட்சத்திரத்தின் உருவம் வில்லாகும். ஸ்ரீராமர் வில்லேந்தி ராவணனை வெற்றி கொண்டார். வெற்றி என்பது பொது வழியல்ல. அது எப்போதும் தனி வழியாகத்தான் இருந்து வருகிறது. அதனால்தான் அன்றாட வாழ்வில் வெல்பவர் சிலராகவும், வீழ்பவர் பலராகவும் இருந்து வருகிறார்கள்.

Ayodhya ram temple inauguration: Lord Ramar Bows and Arrows Symbol Analysis

வெற்றிக்கான நேர்வழி என்பது உழைப்பு தான் என்பது உலகளாவிய விதியாகும். ஆனால், உழைப்பவர்கள் அனைவரும் வெற்றி பெறுகிறார்கள் என்று சொல்ல முடிவதில்லை. உலகில் உள்ள அனைவரும், ஏதாவது ஒரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களாகத்தான் இருப்பார்கள். அந்த வகையில் ஒருவரது ஜென்ம நட்சத்திரத்திற்குரிய குறியீடுகள் அல்லது வடிவங்களை தினமும் பார்ப்பது அல்லது பயன்படுத்துவது என்ற நிலையில் அவரது முயற்சிகளில் வெற்றிக்கான சாத்தியங்கள் அதிகரிக்கின்றன என்று முன்னோர்கள் கண்டறிந்துள்ளார்கள்.

ஜோதிட சாஸ்திர நூல்களில் இருபத்தி ஏழு நட்சத்திரங்களுக்கும் சின்னம் அல்லது குறியீடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை நமது தனிப்பட்ட வெற்றி சின்னங்களாகவும் பயன்படுத்திக்கொள்ள முடியும். அதாவது, வசிக்கும் வீடு, பணிபுரியும் இடம், அணியும் ஆடைகள், வியாபார நிறுவன சின்னங்கள், விசிட்டிங்கார்டு போன்றவற்றில் அவரவர் ஜென்ம நட்சத்திரத்திற்குரிய சின்னங்களை பயன்படுத்தினால், வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு களும், சந்தர்ப்பங்களும் இயல்பாக அமைகின்றன என்பது நம்பிக்கையாகும்.
அதற்காக, புராண கால உதாரணங்களை இங்கே காணலாம்.

பகவான் ஸ்ரீவாமனரின் ஜென்ம நட்சத்திரம் திருவோணமாகும். திருவோணம் நட்சத்திரத்தின் உருவம் மூன்று பாதச்சுவடுகள் என கூறப்படுகிறது. ஸ்ரீவாமனர் ஈரேழு உலகையும் ஈரடியாய் அளந்து மூன்றாவது அடியை மஹாபலி சக்கரவர்த்தியின் தலையில் வைத்து அவன் கர்வத்தை அடக்கினார்.எனவே ஸ்ரீவாமனருக்கு உலகளந்த பெருமாள் என்னும் நாமம் உண்டு.

ஸ்ரீஅனுமனின் ஜென்ம நட்சத்திரம் மூலமாகும். மூலம் நட்சத்திரத்தின் உருவம் சிங்கத்தின் வால் என ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆஞ்சநேயரின் கைகளில் உள்ள கதையின்' வடிவம் கிட்டத்தட்ட அந்த வடிவத்தில் இருப்பதும், தனது வாலை எப்படியெல்லாம் பயன்படுத்தினார் என்பதையும் அனைவரும் நன்றாக அறிவோமல்லவா..?

பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் ஜென்ம நட்சத்திரம் ரோஹிணி.ரோஹிணி நட்சத்திரத்தின் உருவம் தேர்.ஸ்ரீகிருஷ்ணர் தேரோட்டியாக இருந்து பாண்டவர்களுக்கு மஹாபாரதப்போரில் வெற்றி தேடித்தந்தார்.

பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தர்மரின் ஜென்ம நட்சத்திரம் கேட்டை என்று ஒரு தகவல் இருக்கிறது. அதன் குறியீடாக வேல் குறிப்பிடப்படுகிறது. தர்மர் வேலை குறி பார்த்து எறிவதில் திறமை மிக்கவராக சொல்லப்படுகிறார். பாரதப்போரில் சல்லியனோடு நடந்த போரில், திறமையாக வேல் எறிந்து அவனை வென்றது பாரதத்தில் குறிப்பிடப்படுகிறது.

ருத்ரனான, சிவனின் ஜென்ம நட்சத்திரம் திருவாதிரை ஆகும். அதன் குறியீடாக மண்டை ஓடு சொல்லப்பட்டுள்ளது. ருத்ரன் மண்டையோட்டு மாலையை அணிந்திருப்பார். திருமகளான மகாலட்சுமியின் நட்சத்திரம் பூசம் ஆகும். அதன் குறியீடுகளாக தாமரை மற்றும் பசுவின் மடி ஆகியவை குறிப்பிடப்படுகிறது.

அசுரர்களை அழிக்கும் போதும் ராவணன் உடனான போரின் போதும் வில்லேந்தி அம்பெய்த ராமன் சீதா தேவியை திருமணம் செய்யும் போது சுயம்வரத்தில் வில்லை வளைத்து ஒடித்தது ஏன் என்ற கேள்வி எழலாம். அது பற்றியும் முகநூலில் ஆன்மீகவாதிகள் எழுதியுள்ளனர்.

ஜனக மகாராஜன், சிவதனுசை வைத்திருந்த இடத்திற்கு பெயர் 'கார்முக சாலை'. எட்டுச் சக்கரங்களுடைய ஒரு மிகப் பெரிய இரும்பு பேழையில் அந்த தனுசு வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் ஜனகனின் உத்திரவுக்கிணங்க அதை ஆயிரக்கணக்கான பணியாளர்கள் சுமந்து வந்தனர். சிவதனுசை எடுத்து வளைத்தல் என்பது அந்த சிவபெருமான் மற்றும் திருமால் ஆகிய இருவராலும் மட்டுமே முடியும். திருமகள் போன்ற நம் மகளான சீதாதேவியை அந்த திருமாலே வந்து மணக்கட்டும் என்று கருதி தான் ஜனகன் சிவதனுசை எடுத்து வளைப்பவருக்கே சீதையை திருமணம் செய்து தருவேன் என்று அறிவித்திருந்தான்.

சதானந்த முனிவர் என்பவர், ராம லக்ஷ்மனர்களிடம் அந்த சிவதனுசின் வரலாற்றை கூறினார். ஒரு முறை பார்வதியின் தந்தையாகிய தக்ஷன் என்பவன் சிவனை அழைக்காது ஒரு பெரும் யாகத்தை துவக்கினான். தன்னை மதிக்காது தக்ஷன் செய்த யாகத்தையும் அதில் கலந்துகொண்டவர்களையும் அழித்துவிட்டு வருமாறு சிவபெருமான் தனது கண்களில் இருந்து உருவாக்கிய வீரபத்திரருக்கு உத்தரவிட்டார். தானும் ஒரு மிகப் பெரிய தனுசை எடுத்துக்கொண்டு வேள்விச் சாலையை அடைந்தார்.

அங்கு தேவர்கள் அனைவரையும் அழித்தார். பின்னர் சினம் தணிந்து அனைவரையும் உயிர்பித்தார். சினம் தணிந்த நிலையில் தன் கையில் இருந்த அந்த பெரிய வில்லை, ஜனகனின் முன்னோர்களில் ஒருவனுக்கு கொடுத்துவிட்டதாக வரலாறு. அதுவே இந்த திரயம்பகம் எனப்படும் சிவதனுசாகும்." என்று கூறி முடித்தார் சதானந்த முனிவர்.

இதனிடையே சீதையின் அழகைக் கண்டு அவளை மணமுடிக்க விண்ணோர்களும் மண்ணோர்களும் போட்டிப்போட்டுக்கொண்டு வந்தனர். ஆயினும் சிவதனுசை வளைப்பவர்க்கே சீதையை மணமுடித்து தருவேன் என்று ஜனகன் கூறினார். யாராலும் வில்லை எடுக்க முடியவில்லை அனைவரும் தோல்வியடைந்து திரும்பினர்.

விஸ்வாமித்திரர், இராமபிரானை நோக்க, குருவின் குறிப்பறிந்த ராமன் எழுந்தான். சிவ தனுசை நோக்கி நடந்து சென்று வில்லை கையில் எடுத்த காட்சியை கண்ட பல பெண்கள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இராமன் வெல்லவேண்டும் என்று வாழ்த்தினர்.

ராமன் வில்லை எடுத்து நாணேற்றியதும் அது முறிந்தது. வில் முறிந்த அந்த ஓசையானது, பூமியெங்கும் கேட்டது. மேலுலகத்திலும், பாதாளலோகத்திலும் கூட கேட்டது. விண்ணோர் பூமழை பொழிந்தனர். ராமர் சிவதனுசை வளைத்த இந்த சம்பவத்தை கேட்போர் படிப்போர் அனைவரும் துன்பம் நீங்கி இன்பம் பெறுவார் என்று கூறப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+