உடம்பில் ஆடையின்றி குளிக்கலாமா? எண்ணெய் குளியலுக்கு உகந்த நாள், நேரம் எது? ஆன்மீகம் சொல்வது என்ன?
சென்னை: எண்ணெய் தேய்த்து குளிப்பது பற்றியும், எந்தெந்த நாட்களில் குளிக்கலாம்? எந்த நேரத்தில் குளிப்பது நன்மை பயக்கும் என்பது பற்றியெல்லாம் நமது சாஸ்திரங்களில் விளக்கமாக சொல்லப்பட்டுள்ளது. இதனை சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.
எண்ணெய்க்குளியலை பொறுத்தவரை, சூரியன் உதயமாகி, 6 நாழிகைக்கு மேல் உள்ள நேரம்தான் சரியான நேரம் என்கிறார்கள்.. அதன்படி, காலை 8.24 மணிக்கு மேல், மாலை 3.36 மணிக்கு முன்பு எப்போது வேண்டுமானாலும் எண்ணெய் தேய்த்து குளிக்கலாம்.

எண்ணெய் குளியல்: விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், இந்த 3 எண்ணெய்களையும் சமமாகக் கலந்து உச்சி முதல் உள்ளங்கால் வரை தேய்த்து ஊறவிட்டு குளிக்க வேண்டும். புதன், மற்றும் சனிக்கிழமைகள் எண்ணெய் குளியலுக்கான சிறப்பு நாட்களாகும்... ஆனால், ஆண்கள் சனிக்கிழமைகளிலும், பெண்கள் வெள்ளிக்கிழமைகளிலும் எண்ணெய் தேய்த்து குளித்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்கிறார்கள்.
எக்காரணம் கொண்டும், ஞாயிறுகளில் எண்ணெய் தேய்த்து குளித்தால், குடும்பத்தின் செல்வம் நீங்கவிடும் என்பார்கள். ஆனால், குளிப்பதற்கு தலையில் எண்ணெய் வைத்துக்கொண்டு சாப்பிடக்கூடாது.
சருமத்தில் அழுக்கு: அதேபோல, உணவு சாப்பிட்டதுமே குளிக்க கூடாது என்பார்கள்.. ஏனென்றால் குளிக்கும்போது, நம்முடைய சருமத்திலுள்ள அழுக்குகளும் வெளியேறுகின்றன.. அப்படி அழுக்குகள் வெளியேறும்போது, உடலுக்குள் உள்ள செல்கள் ஆற்றல் பெறுகின்றன.. அதனால்தான் குளித்ததுமே, பசி உணர்வு நமக்கு தோன்றுகிறது.
எனவே, நாம் சாப்பிட்டதுமே குளித்தால், உடலில் உண்டான குளிர்ச்சித்தன்மையால் நொதிகள் சுரக்காமல் போய்விடுமாம். இது அஜீரணத்தை ஏற்படுத்திவிடும். எனவேதான் சாப்பிட்ட பிறகு குளிக்கக்கூடாது என்கிறார்கள்.
ஆய்வுகள்: மேலும், குளித்துவிட்டு சாப்பிடும்போது, உணவில் உள்ள சத்துக்கள் உடலில் உறிஞ்சப்பட்டு, ஆற்றலாக பெற்றுக்கொள்கிறது... அதேபோல, காலையில் குளிப்பதை விட, இரவில் குளிப்பதுதான், அதிக பலன்களை கொண்டிருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றன. தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது, சருமத்துக்கு மிகவும் நல்லது.
அதேபோல, குளிக்கும்போது ஆடைகள் இல்லாமல் குளிப்பது பாவம் என்கின்றன சாஸ்திரங்கள்.. மனிதன் நிர்வாணமாக குளிப்பதை மகாலட்சுமி, வர்ண பகவான் கடவுள்கள் விரும்புவதில்லையாம்.. மேலும், நிர்வாணமாக குளியலில் ஈடுபடுவோருக்கு உள்ளத்தில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.. இது குடும்பத்தில் நிம்மதியை குலைத்துவிடும். மேலும், நிர்வாணமாக குளிப்பவர்களுக்கு தோஷம் ஏற்பட்டுவிடும் என்கின்றன சாஸ்திரங்கள்.
புண்ணிய நதிகள்: எனவே, வீடுகளில் குளித்தாலும், புண்ணிய நதிகளில் நீராடினாலும், முழு ஆடைகளுடனே நீராட வேண்டும். உடலில் எந்த ஆடைகளுமே அணியாமல் குளித்தால் அது தோஷத்தை ஏற்படுத்திவிடும் என்பதால், வீட்டிலும் நிர்வாணமாக குளிப்பதை தவிர்க்க வேண்டும்.. குழந்தைகளை வீட்டிற்குள் நிர்வாணமாக குளிக்க வைக்கலாம். ஆனால், தெருவில் மற்றவர் பார்க்கும்படி குளிக்க வைத்தால், அது திருஷ்டியை உண்டாக்கிவிடும்.
அதேபோல, தோஷம் உள்ளவர்கள், குளிக்கும் தண்ணீரில் கல் உப்பு, மஞ்சள், சில வேப்பிலைகளை அள்ளிப்போட்டு குளிக்கலாம்.. இந்த பொருட்கள் அனைத்துமே மருத்துவ குணம் நிறைந்தது.. சருமத்துக்கும் பாதுகாப்பு தரக்கூடியது.. உடலிலுள்ள தொற்றுக்கள், கிருமிகளை போக்கக்கூடிய ஆன்டிபயாடிக் ஆகும்.. இதில் குளிக்கும்போது, உங்களது தோஷமும் நீங்கும் என்கிறார்கள்.
அதேபோல, சாப்பிடுவதற்கு முன்பாக, கை கால் வாய் போன்றவற்றை நீரால் கழுவ வேண்டும். காலில் ஈரம் உலர்வதற்கு முன்பே உணவு சாப்பிட ஆரம்பித்துவிட வேண்டுமாம். சாப்பிடும்போது இடதுகையை கீழே ஊன்றக் கூடாது.. வீட்டில் கதவை திறந்து வைத்துக் கொண்டு வாசலுக்கு எதிரே உட்கார்ந்து சாப்பிடக்கூடாது... சூரிய உதயத்திலும் மறையும்போதும், உண்ணக்கூடாது. சாப்பிடும்போது செருப்பு சாப்பிடக்கூடாது.












Click it and Unblock the Notifications