வெள்ளி நகைகளை சிவப்பு துணியில் சுற்றி வைங்க.. வெள்ளியின் நன்மைய பாருங்க.. வெள்ளிக்கு பெஸ்ட் திசை இது

Subscribe to Oneindia Tamil

சென்னை: வெள்ளி பொருட்களை தொடர்ந்து வீடுகளில் பயன்படுத்த என்ன காரணம் தெரியுமா? வெள்ளியின் முக்கியத்துவம் என்ன? வெள்ளி பொருட்களை எந்தெந்த திசையில் வீடுகளில் வைத்திருக்க வேண்டும்? வெள்ளி பொருட்களிலிருந்து சிறந்த பலனை பெற என்ன செய்ய வேண்டும்? இதுகுறித்து ஆன்மீகத்தில் மிக எளிதாகவும், தெளிவாகவும், சொல்லப்பட்டுள்ளன.. அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்.

திருமண வைபவம் என்றாலே, வெள்ளியிலான கூஜா, செம்பு, தட்டுக்கள், குங்குமச்சிமிழ், வெள்ளி விளக்குகள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.. திருமண நிகழ்வில் மட்டுமல்லாமல், பெண்ணுக்கு கொடுத்தனுப்பும் சீதனத்திலும் வெள்ளிக்குடம், வெள்ளி செம்பு உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் இடம்பெறுகின்றன.

Spirituality Silver Jewellery Silver

வெள்ளி பொருட்களின் முக்கியத்துவம்

அதேபோல, பூஜைகளிலும், வெள்ளியில் சூட தட்டு, சாம்பிராணி தட்டு, வெள்ளி விளக்கு, தட்டு, சந்தனக் கும்பா, குங்குமச்சிமிழ் என பல வகையாக வைப்பதுண்டு. சில வீடுகளில் வெள்ளியில் ஆன விநாயகர் சிலை, அன்னபூரணி சிலை போன்ற பல கடவுளின் உருவச் சிலைகளையும் வைத்திருப்பார்கள்.. வெள்ளி முலாம் பூசப்பட்ட சிலைகளும் உண்டு. இதில், வெள்ளி நாணயங்களும் அடக்கம்.

அவ்வளவு ஏன்? கோவில்களில் கடவுளுக்கு வெள்ளி மூக்குத்தி, சூலாயுதம், வேல் என வெள்ளி அலங்கார பொருட்கள் என பலவகையான வெள்ளிப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன.. இந்த அளவுக்கு வெள்ளி முக்கியத்துவம் பெறுவதற்கு மருத்துவ மற்றும் ஆன்மீக காரணங்கள் உள்ளன.

மருத்துவ நலனை வாரி வழங்கும் வெள்ளி

நச்சு தன்மையை அழிக்கக்கூடியது வெள்ளி.. எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது.. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளி கிண்ணம் ஸ்பூன் தட்டு என்று பயன்படுத்தும்போது, நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாகிறது.. பிறந்த குழந்தைகளுக்கு வெள்ளியில் கால் தண்டை அணிவதும் இதற்காகத்தான்.

மேலும், வெள்ளி என்பது குளிர்ச்சியான உலோகமாகும்.. நன்கு சுத்திகரிக்கப்பட்ட பிறகுதான், வெள்ளி தேவையான பொருள்களாக உருமாறுகிறது. எனவேதான், குழந்தைகளுக்கு உடலில் உஷ்ணம் நெருங்கக்கூடாது என்பதற்காகவும், நோய் எதிர்ப்பு சக்திக்காகவும் வெள்ளியிலான கொலுசு, கால் தண்டை, அரண்ஞான் கொடி பயன்படுத்தப்படுகிறது.

சந்திரன், சுக்கிரன் - வெள்ளி

உடலிலுள்ள நீர் உறுப்பு மற்றும் கப தோஷத்தைக் கட்டுப்படுத்தி, உடலையும், மனதையும் சமநிலையில் வைத்திருக்கக்கூடிய தன்மை வெள்ளிக்கு உண்டு என்பதால், வெள்ளியிலான நகைகளை உடலில் அணிய சொல்கிறார்கள்.

ஆன்மீகத்தில், வெள்ளிக்கு சிறப்பான இடம் உண்டு.. வெள்ளை நிறம் சந்திரனின் அடையாளமாக கருதப்படுகிறது. சிவபெருமானின் கண்களிலிருந்து வெள்ளி தோன்றியதாக சொல்வார்கள்.. எனவே, வெள்ளியில் தெய்வீக சக்தி நிரம்பியிருக்கிறதாம்... சந்திரனுடனும் சுக்கிரனுடனும் வெள்ளி தொடர்புடையதாக உள்ளது.. அதுமட்டுமல்ல, வீட்டில் வெள்ளி வைத்திருப்பது எதிர்மறை சக்திகளை விரட்டியடிக்கும்.. வீட்டில் சமநிலை, பாதுகாப்பு, செழிப்பை உண்டாக்கும்.

சிவப்பு துணியில் வெள்ளி நகையை இப்படி வையுங்க

எனவே, வீட்டில் வெள்ளி பாத்திரம், வெள்ளி விளக்கு என இப்படி ஏதாவது பயன்படுத்துவது நல்லது.. ஆனால், அவைகளை உரிய திசையில் வைப்பதால் முழுப்பலனை பெறலாம்.. வெள்ளி நகை, வெள்ளிப்பொருட்களை, வடக்கு அல்லது வடகிழக்கு திசையில் வைக்கலாம்..

அதேபோல, வெள்ளிப் பொருட்களை எப்போதும் சிவப்பு துணியில் சுற்றி வைக்க வேண்டும் என்பார்கள்.. இதனால், சந்திரனின் நிலை வலுப்பெற்று மன உளைச்சல் நீங்கி அமைதி கிடைக்கும். அதேபோல, வெள்ளியை சிவப்புத் துணியில் கட்டி வீட்டில் மேற்கு திசையில் வைத்தால், குடும்பத்தில் செழிப்பும், நன்மையும் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+