ஒரே ஒரு கைப்பிடி.. "இந்த" பொருள் மட்டும் போதும்.. 48 நாட்களில் நினைச்சது நிறைவேறும் பெஸ்ட் பரிகாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பாடுபட்டு உழைத்து சம்பாதித்தாலும், பணம் கையில் தங்குவதில்லையா? கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை இருக்கிறதா? இதற்கும்கூட, சாஸ்திரங்களில் ஏராளமான தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளன. அதில் ஒன்றிரண்டு பரிகாரங்களை மட்டும் பார்ப்போம்.

திருஷ்டி கழிப்பது முதல் பரிகாரங்கள் வரை, ஆன்மீகத்தில் கல் உப்புக்கு பிரதான இடம் உண்டு.. காரணம், இந்த கல் உப்பு எதிர்மறை ஆற்றல்களை வெளியேற்றி நேர்மறை ஆற்றல்களை வீட்டிற்குள் வரவைக்கும் தன்மை கொண்டது..

Parikaram

திருஷ்டி: அதனால்தான், கடலில் குளித்தால் நமது பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது..

ஒரு கிண்ணத்தில் உப்புக்கல்லை நிரம்பும் அளவுக்கு போட்டு, உங்கள் வீட்டு வாசலில் வைக்க வேண்டும். இதனால், உங்கள் மீதுள்ள திருஷ்டிகள் கழிந்துவிடும். கல் உப்பு போலவே, இந்து உப்பையும் வாங்கி வைக்கலாம்..

பெரும்பாலும், வெள்ளிக்கிழமைகளில் கல் உப்பினை வாங்கி, கிச்சனில் வைக்கலாம். இந்த உப்பில் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து பிரார்த்தித்து வருவதால் பணக்கஷ்டம் தீரும்.

கைப்பிடி உப்பு: அதேபோல, இரவு தூங்குவதற்கு முன்பு, கல் உப்பில் ஒரு எளிய பரிகாரம் செய்யலாம்.. ஒரு கண்ணாடி டம்ளரில், கல் உப்பு ஒரு கைப்பிடியளவு போட வேண்டும். பிறகு டம்ளர் நிரம்பும் அளவிற்கு தண்ணீர் ஊற்ற வேண்டும்..

இந்த டம்ளரை நீங்கள் தூங்கும் இடத்திற்கு பக்கத்திலேயே வைத்து, மனதார பிரார்த்திக்க வேண்டும்.. உங்களுக்கு தீர வேண்டிய கஷ்டங்களை எல்லாம் சொல்லி, அவைகள் நீங்க வேண்டும், அந்த காரியம் நிறைவேற வேண்டும் என்று பிரார்த்தனை செய்துவிட்டு தூங்க செல்லுங்கள்.

கல் உப்பு: மறுநாள் இரவும், இந்த தண்ணீரை கால்படாத இடத்தில் அல்லது நீரோட்டம் உள்ள இடத்தில் ஊற்றிவிட்டு, மறுபடியும் இதேபோல செய்ய வேண்டும். இப்படி தொடர்ந்து 10 நாட்கள் நம்பிக்கையுடன் செய்து வந்தால் கண்டிப்பாக உங்கள் மனதில் நினைத்த காரியம் வெற்றிபெறும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

இன்னொரு உப்புக்கல் பரிகாரமும் இருக்கிறது.. பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து, கிழக்கு பக்கத்தில் உட்கார்ந்து கொள்ள வேண்டும். பிறகு 2 கைகளிலும் கல் உப்பை எடுத்துக்கொள்ள வேண்டும். உப்பு இருக்கும் 2 கைகளையும் தனித்தனியாக தொடைகளின் மீது வைக்க வேண்டும்.. அதாவது, உள்ளங்கை வானத்தை நோக்கி இருக்க வேண்டும்.

நன்மைகள்: பிறகு கையிலிருக்கும் உப்போடு 2 கைகளையும் மூட வேண்டும். பிறகு கண்களை மூடி நீங்கள் நினைத்த காரியத்தை வேண்டிக்கொள்ள வேண்டும்.. உங்களுக்கு தேவையான நேரத்தில் இப்படி பிரார்தித்து கொள்ளலாம். இதனால், உங்களை தேடி நன்மைகள் வரும் என்பது ஐதீகம்.

அதேபோல, ஒரு கண்ணாடி பாத்திரத்தில், கல் உப்பை போட்டு, எலுமிச்சம்பழத்தை அதில் நடுவில் வைக்க வேண்டும்.. பிறகு 4 காய்ந்த மிளகாய்களை, பாத்திரத்தின் 4 மூலைகளிலும் வைத்து, அதனை தலைவாசல் கதவின் உட்புறம் பகுதியில் வைக்க வேண்டும்.

கல் உப்பு தீபம்: கல் உப்பு, மிளகாயின் கூர்மையான பகுதிகள், இவை இரண்டுமே எதிர்மறை சக்திகளை எடுத்துக்கொள்ளும் தன்மை கொண்டவையாகும். இதனை வாரம் ஒருமுறை மாற்றி வைக்க வேண்டும். அப்படி மாற்றும்போது, இந்த பொருட்களை ஓடும் நீரில் விட்டுவிட வேண்டும்.

அதேபோல, கல் உப்பு தீபம் ஏற்றி வைத்தால், குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் தீரும். முக்கியமாக பௌர்ணமி நாட்களில் கல்உப்பு தீபம் ஏற்றினால், தொழில் தடை, வருமான தடை, பதிவு கிடைப்பதில் இருக்கும் தடைகள் அனைத்தும் 48 நாட்களுக்குள் நீங்கி, நீங்கள் நினைத்தது நடக்கும் என்பது நம்பிக்கையாகும். கல் உப்பு தீபம் ஏற்றும்போது, நல்லெண்ணெய் ஊற்றி தீபத்தை கிழக்கு திசை பார்த்து ஏற்ற வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+