யாரெல்லாம் தர்ப்பணம் தர்ப்பணம்? எள்ளும் தண்ணீரும் அமாவாசையில் எதற்காக? எள் நீரை இரைக்கும் முறை? ஓஹோ
சென்னை: ஆடி அமாவாசை நாளில் பித்ருக்களுக்கு எள்ளும் தண்ணீரும் கொடுத்து தர்ப்பணம் செய்ய வேண்டும். உயிரினங்களுக்கு படைக்கும் உணவிலும், கருப்பு எள் சேர்ப்பது அவசியமாகும்.. முன்னோர் வழிபாட்டிற்கும், எள்ளிற்கும் என்ன தொடர்பு? கருப்பு எள்ளின் முக்கியத்துவம் என்ன? அமாவாசைகளில் எள்ளும் தண்ணீரும் இறைக்க சொல்ல என்ன காரணம்? சுருக்கமாக பார்ப்போம்.
திருமாலின் வியர்வை துளியில் இருந்து தோன்றியதுதான் எள் என்பார்கள்.. விஷ்ணுவிலிருந்து விஷ்ணு பகவானின் அம்சமாக தோன்றியது எள். இதைத் தானமாகக் கொடுத்தாலே சகல பாவங்களும் நீங்கிவிடும் என்று புராணங்கள் சொல்கின்றன.

என்ன காரணம்: பூமியில் வாழ்ந்தபோது செய்த பலவித பாவங்கள் காரணமாக, நம்முடைய முன்னோர்கள் திருமாலின் திருவடியை சரணாகதி அடைய முடியாமல் இருப்பார்கள்.. எனவே பாவம் முற்றிலும் நீங்கி, அவர்கள் மீண்டும் மனித பிறவி எடுத்து திருமாலின் திருவடியை சரணடைந்து வைகுண்ட பதவியாகிய பிறவா நிலையை பெற வேண்டும் என்பதற்காகத்தான் எள்ளை வைத்து அமாவாசையன்று தர்ப்பணம் செய்யப்படுகிறது.
அதனால்தான், காகத்திற்கு சாதம் வைக்கும்போதுகூட, எள் கலந்த சாதத்தையே படைக்க வேண்டும் என்கிறார்கள். அதுமட்டுமல்ல, எள்ளுடன், தண்ணீரை கலந்து தர்ப்பணம் செய்யும்போது, அது திருமாலின் பிரசாதமாக நினைத்து முன்னோர்கள் மனம் மகிழ்ந்து ஏற்றுக் கொள்வார்களாம்.
மறைந்த தகப்பனார், தாத்தா, கொள்ளுத் தாத்தா, அம்மா, பாட்டி, கொள்ளுப் பாட்டி, அம்மாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை, அப்பாவின் கோத்திரம் - அவர்களின் பரம்பரை என்று 12 பேருக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும். அதேபோல், யாருமில்லாத ஆதரவற்று இறந்தவர்களுக்கும் தர்ப்பணம் செய்வது மிகவும் விசேஷமாக சாஸ்திரங்களில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
சந்திரன் திரவம்: அதேபோல, சந்திரனுக்கு உரிய திரவமாக தண்ணீர் உள்ளது.. எனவே, எள், தண்ணீர் இவை இரண்டையும் சேர்த்து தருவதால், சனி - சந்திரன் சேர்ந்து இதற்குரிய பலனை பித்ரு லோகத்திலுள்ள நம் முன்னோர்களுக்கு சென்று சேர்ப்பார்கள்.. பித்ருலோகத்தில் இருக்கும் நம்முடைய முன்னோர்களுக்கும் வைகுண்ட பதவி கிடைக்க வழி வகை செய்யும்.
அதேபோல, எள்ளும் தண்ணீரும் இறைப்பவர்கள் வெறும் தரையில் உட்காராமல், வெள்ளை துணியை விரித்து அதன் மேல் அமர வேண்டும்.,. பிறகு தாம்பூல தட்டை வைத்து உங்களது உள்ளங்கையில் கருப்பு எள்ளையும் பச்சரிசியையும் வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது, ஒரு பித்தளை சொம்பில் நீர் எடுத்து வலது கையிலுள்ள எள் , பச்சரிசியை தாம்பூல தட்டில் விழுமாறு தண்ணீர் ஊற்றி இரைக்க வேண்டும்.
இறைக்கும் முறை: இறைக்கும்போது கட்டைவிரல் மற்றும் ஆள்காட்டி விரல் இடையில் எள்ளும் தண்ணீரும் செல்லுமாறு தட்டில் விழ செய்ய வேண்டும். ஒரு எள் கூட கையில் இருக்கக்கூடாது. கையை சுத்தமாக கழுவி தாம்பூலத்தில் வைத்து விட வேண்டும்..
இப்படி எள்ளும் தண்ணீரும் இறைக்கும்போது தங்களது முன்னோர்கள் அனைவருக்கும் என்று சொல்லிக் கொண்டே இறைக்க வேண்டும். இறுதியாக, தட்டிலுள்ளவற்றை நீர்நிலைகளில் கரைத்து விடலாம்... மாலையில் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபாடு செய்வது அவசியம்.
தர்ப்பணம்: தாய் தந்தையை இழந்த ஆண், கணவனை இழந்த பெண் தர்ப்பணம் செய்யலாம்.. அதாவது, தாய், தந்தை இருவரும் இல்லாதவர்கள், தாய் உண்டு தந்தை இல்லை என்றவர்கள், தந்தை உண்டு தாய் இல்லை என்றவர்கள், இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம். ஆனால், சுமங்கலி பெண்கள் தர்ப்பணம் செய்யக்கூடாது. பெண்கள் எள்ளும் தண்ணீரும் இருக்கக் கூடாது.. பெண்கள் அன்றைய தினம் விரதமும் இருக்கக் கூடாது. ராகு காலம், எமகண்ட நேரத்தில் தர்ப்பணம் செய்வதை தவிர்க்க வேண்டும்












Click it and Unblock the Notifications