மஞ்சள் மூட்டை.. ரூ.1 பரிகாரம் தெரியுமா? இதை செய்தாலே வீட்டில் பணம் தங்கும்.. அரச மரத்தின் பரிகாரம்
சென்னை: கையில் 1 ரூபாய் இருந்தால், அதை கொண்டே நம்முடைய இன்னல்களை போக்கி, செல்வத்தை பெருக்கலாம் என்கின்றன சாஸ்திரங்கள்.
நம்முடைய வாழ்க்கையில் தெரிந்தோ, தெரியாமலோ எத்தனையோ காரியங்களை செய்துவிடுகிறோம்.. நம்முடைய செயல்களே நமது பலாபலன்களை தருகின்றன.

தவறுகள்: நாம் தெரியாமலேயே செய்யும் ஒருசில தவறுகளால், கஷ்டங்களும் வந்துவிடுகின்றன.. இதற்கெல்லாம் பரிகாரங்களை நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள்.. பண வருமானத்திற்கு ஏற்ற பரிகாரங்களை செய்வதால், மகாலட்சுமியின் அருள் தாராளமாக கிடைக்கும் என்பார்கள். அந்தவகையில், நாணய பரிகாரமும் ஒன்று.
உங்களின் பொருளாதார நிலையில் முன்னேற்றத்தை காண வேண்டுமானால், புதன்கிழமைகளில் ஒரு மஞ்சள் துணியில் 5 மஞ்சள் கிழங்கு, 1 ரூபாய் நாணயம் ஒன்றை வைத்து கட்டி, வீட்டின் பூஜையறையில் வைத்துவிட வேண்டும். பிறகு குலதெய்வத்தை நினைத்து வீட்டில் நெய் தீபம் ஏற்றுங்கள். தீபம் தானாக அணைந்ததுமே, அந்த மஞ்சள் மூட்டையை பணம் வைக்கும் பெட்டி அல்லது பீரோவில் வைத்துவிட வேண்டும். இதனால், நிச்சயம் பலன்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும.
ஏலக்காய்: இதே 1 ரூபாய் நாணயத்தை வைத்து, வேறு வகையான பரிகாரமும் செய்யலாம்.. வெற்றிலை மீது 1 ரூபாய் நாணயத்தையும், விரலி மஞ்சள், ஏலக்காயை வைத்து முடிச்சு போல கட்டிக்கொள்ள வேண்டும். இப்போது உங்களது பிரார்த்தனையை மனதிற்குள் முழுமனதுடன் வேண்டிக் கொள்ள வேண்டும். உங்கள் வீட்டுக்கு பக்கத்திலிருக்கும் கோயிலின் அரசமரத்தடியில், அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி, அந்த 1ரூபாய் முடிச்சையும் மரத்தடியில் வைத்துவிட வேண்டும்.
இப்போது மீண்டும் உங்களது எண்ணம் ஈடேற வேண்டும் என்று மனமுருகி பிரார்த்தனை செய்துவிட்டு, அந்த முடிச்சை அங்கேயே வைத்துவிட்டு, வீட்டிற்கு வந்து விடுங்கள். விரைவில் உங்கள் காரியம் கைகூடிவிடும்.
பழைய மரம்: இந்த பரிகாரத்தை எந்த கிழமைகளிலும் செய்யலாம். ஆனால், அரச மரத்தடியில் இந்த முடிச்சை மாலை 6 மணிக்குள்ளாக வைத்துவிட வேண்டும். 6 மணிக்கு மேல் எந்த வேண்டுதல் செய்தாலும் அதற்கு பலன் கிடைக்காது என்பார்கள். அதுமட்டுமல்ல, அந்த அரசமரம் மிகவும் பழமைவாய்ந்த மரமாக இருக்க வேண்டும்... இந்த மரத்தின் கீழ் நிறைய பரிகாரங்களும் செய்திருக்க வேண்டும்..
அதேபோல, உங்களது எந்த வேண்டுதல்கள் நிறைவேற வேண்டுமானாலும், இந்த 1 ரூபாய் நாணயத்தை எடுத்து மஞ்சள் துணியில் கட்டி முடிச்சு போட்டு காணிக்கையாக கோயில் உண்டியலில் சேர்க்கலாம். இதனால் குடும்பத்தில் சுபிட்சம் சேரும் என்பது ஐதீகமாகும்.












Click it and Unblock the Notifications