வெற்றிலை வெற்றி.. ஒரு கைப்பிடி கல் உப்பு, ஒரேயொரு வெத்தல போதுமே.. வீட்டில் நடக்கும் அதிசயம் பாருங்க

Subscribe to Oneindia Tamil

சென்னை: எவ்வளவுதான் சம்பாதித்தாலும், கையில் பணமே நிற்பதில்லை என்ற வருத்தம் பலருக்கும் உண்டு. இதற்கு சாஸ்திரங்களில் ஒருசில தீர்வுகள் சொல்லப்பட்டுள்ளன.
எப்போதுமே வீட்டில் அமைதி குலைந்தாலோ, உடல்நலக்குறைவு ஏற்பட்டாலோ, அல்லது பணநெருக்கடி, வறுமை சூழ்ந்தாலோ, அனைத்துக்குமே வெற்றிலை நல்ல தீர்வை தருகிறது. இதற்கு எளிய முறையில் எத்தனையோ பரிகாரங்கள் உள்ளன.

spirituality betel leaf rock salt

குறிப்பாக, வெற்றிலையை பசுமை மாறாமல் வாங்கி வந்து, அதை தண்ணீரில் சுத்தமாக கழுவி, வீட்டின் வாசலிலேயே தொங்கவிட வேண்டும். இதனால், வீட்டிற்குள்ளிருக்கும் எதிர்மறை சக்தி வெளியேற்றப்பட்டு, நேர்மறை ஆற்றல் வீட்டுக்குள் பரவும்..

வெற்றிலை: ஆனால், வாசலில் தொங்கவிடும் இந்த வெற்றிலைகள் காய்ந்து விடக்கூடாது.. அப்படியே காய்வது போல தெரிந்தால், உடனே எடுத்துவிட்டு, புதிய வெற்றிலையை மீண்டும் அதுபோல தொங்கவிட வேண்டும்.

அதேபோல, வெற்றிலை, ஒரு தாம்பூல தட்டின்மீது வைத்து, அதன்மீது பச்சை கற்பூரத்தையும் வைக்க வேண்டும். பச்சை கற்பூரத்தில் ஒரு சொட்டு தேங்காய் எண்ணெயை விட்டு, இந்த தட்டை அப்படியே பூஜையறையில் வைத்து பச்சை கற்பூரத்தை ஏற்றி வைக்க வேண்டும். விளக்கேற்றிவிட்டு, மனமுருகி வேண்டிக்கொண்டால், உங்கள் பிரச்சனைகள் விலகும்.

தர்ப்பணம்: புதன்கிழமைகளில், விநாயக கோயிலுக்கு சென்று வெற்றிலை, ஏலக்காய் சேர்த்து தர்ப்பணம் செய்தால், உங்களுக்கிருக்கும் தடைகள் அத்தனையும் நீங்கிவிடும். செவ்வாய்கிழமைகளில் விநாயகருக்கு வெற்றிலை மாலையிட்டு வழிபட்டு வந்தாலும் கடன் பிரச்சினை தீரும்.

அதேபோல, ஒரு வெற்றிலையில் 3 மிளகு வைத்து மடித்து ஒரு நூல் போல கட்டி பூஜையறையில் வைத்துவிட வேண்டும்.. குலதெய்வத்தை மனதார பிரார்த்தனை 3 நாளும் வழிபட்டு வர வேண்டும். 3 நாள் கழித்து இந்த வெற்றிலை பொட்டலத்தை அப்படியே கொண்டு போய் ஓடும் தண்ணீரில் அல்லது ஏரி குளங்களில் போட்டு விட வேண்டும். இதற்கு பிறகு உங்களது பிரார்த்தனை ஈடேறும்.

உப்புக்கல்லை வைத்தும் சில பரிகாரங்களை செய்வதால், தரித்தரம் விலகும் என்கிறார்கள்.. நீங்கள் மாத சம்பளம் வாங்குவதாக இருந்தால், முதல் சம்பளம் வாங்கியதுமே, கல் உப்பு பாக்கெட் , மல்லிகைப்பூ இரண்டினையும் வாங்கிட வேண்டும். சம்பளதாரராக இல்லாவிட்டால், வருவாயின் முதல் பணத்தில் இந்த இரண்டையும் வாங்கலாம்.

திருஷ்டி: உப்புக்கல்லை, வீட்டு வாசலில் ஒரு கிண்ணத்தில் நிரம்பி வழியும் அளவுக்கு போட்டுவிட்டால் போதும்.. அத்தனை திருஷ்டிகளும் உங்கள் மீதிருந்தால் கழிந்துவிடும். இந்து உப்பையும் வைக்கலாம்.. வெள்ளிக்கிழமைகளில் உப்பை வாங்க, சமையலறையில் வைத்து, இதனுடன் 1 ரூபாய் நாணயத்தையும் வைத்து பிரார்த்திக்க வேண்டுமாம். இதனாலும், பணக்கஷ்டம் தீரும் என்பதும் நம்பிக்கையாக இருந்து வருகிறது. உங்கள் குல தெய்வ கோவிலுக்கு சென்று, எடைக்கு எடை பச்சரிசியை தானமாக தரலாம்..

அதேபோல இன்னொரு பரிகாரமும் உண்டு.. ஒரு வெற்றிலையில், சிறிது மஞ்சள் தூளை தண்ணீரில் கரைத்து, அந்த வெற்றிலையில் உங்களுக்கு பணம் அல்லது சொத்து அல்லது நகையை திருப்பி தர வேண்டியவரின் பெயரையும், அவர்கள் உங்களுக்கு தர வேண்டிய தொகையையும் எழுத வேண்டும். இந்த தொகை சீக்கிரம் கைக்கு கிடைக்க வேண்டும் என்றும் வேண்டிக்கொண்டு, பூஜையறையில் ஏற்றி வைத்த விளக்கின் முன்பு வைத்து விடுங்கள். இதனால், விரைவில் பலன் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+