தோஷங்கள் நீங்கணுமா? தமிழகத்தின் இந்த பரிகார சிவன் கோயில்களுக்கு சென்றாலே போதுமே.. தொல்லைகள் தொலையும்
சென்னை: தோஷங்களின் வகைகள் என்னென்ன? தோஷங்களிலிருந்து நிவர்த்தி அடைய, தமிழகத்திலுள்ள என்னென்ன சிவன் கோயில்களுக்கு செல்லலாம்? என்பது பற்றியெல்லாம் ஆன்மீகத்தில் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. இதில் ஒருசிலவற்றை மட்டும் சுருக்கமாக பார்ப்போம்.
கல்லடி பட்டாலும், கண்ணடி படக்கூடாது என்பார்கள் அந்த அளவுக்கு கண் திருஷ்டி மோசமானது.. திருஷ்டி பட்டுவிட்டாலோ அல்லது தோஷத்தால் பாதிக்கப்பட்டு விட்டாலோ, வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகங்கள், சண்டை சச்சரவுகள், பிரிவுகள், நஷ்டம், பொருள் இழப்பு என இப்படி ஏதாவது ஒன்று வரிசையாக வந்து, நம்மை கலங்கடித்துவிடும்.

தோஷங்கள்: இந்த தோஷங்களில்கூட நிறைய வகைகள் உண்டு.. செவ்வாய் தோஷம், அவை ராகு/கேது தோஷம், மாங்கல்ய தோஷம், சூரிய தோஷம், களத்திர தோஷம் ஆகும். இப்படி தோஷம் உள்ளவர்கள், குறிப்பிட்ட கோயில்களுக்கு சென்று வழிபடுவதன் மூலம் தீர்வு காணலாம்.
திருமண தடை உள்ளவர்கள், திருவாரூர் மாவட்டத்திலுள்ள திருமணஞ்சேரி, திருவீழிமிழலை இந்த 2 கோயில்களுக்கும் சென்று வழிபடுவதால், திருமண தடை நீங்கும். குழந்தைப்பேறு வேண்டுவோர், நாகப்பட்டினம் மாவட்டத்திலுள்ள திருவெண்காடு சென்று வழிபடலாம்.
சங்கரன்கோவில்: குறிப்பாக நாகதோஷம் உள்ளவர்கள், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருநாகேஸ்வரம் கோவிலுக்கும், நெல்லை மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் கோவிலுக்கும் செல்லலாம். மூட்டு வலி போன்ற தீராத நோய்கள் நீங்க வேண்டுமானால், நாகை மாவட்டம் வைத்தீஸ்வரன் கோயில் அல்லது தஞ்சாவூர் சூரியனார் கோவிலை ஒட்டியுள்ள திருமங்கலக்குடி கோயிலுக்கு சென்று வழிபடலாம்.. மனநோய் தீர வேண்டுமானால், கோவையிலுள்ள திருமுருகன் பூண்டிக்கு சென்று வழிபடலாம்.
வழக்குகளில் வெற்றியடைய தஞ்சாவூர் அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோவிலுக்கு சென்று வணங்க வேண்டும். சனி தோஷம் நீங்கி சுபிட்சம் பெற வேண்டுமானால், காரைக்கால் திருநள்ளாறு மற்றும் தஞ்சாவூர் திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கலாம். ராகு கேது பரிகாரத்தை இணைந்து மேற்கொள்ள வேண்டுமானால், திருவாரூர் திருப்பாம்புரம் கோயிலுக்கு சென்று வணங்க வேண்டும். ஈரோடு பவானி சங்கமேஸ்வரர் கோயிலுக்கு சென்று வழிபடும்போது, உங்களை சுற்றியுள்ள தீமைகள் விட்டொழியும்..
திருவண்ணாமலை: பிறவியற்ற நிலையை அடைய வேண்டுமானால், திருவாரூர், திருவண்ணாமலை, சிதம்பரம் சிவன் கோவில்களுக்கு சென்று வழிபட வேண்டும்... தஞ்சாவூர் திருச்சேறை ரண ருண ஈஸ்வரரை வணங்கினார் கடன் தொல்லைகள் தீரும்..
கர்ப்பிணி பெண்கள் சுகப்பிரசவம் ஆவதற்கு, தஞ்சையிலுள்ள திருக்கருகாவூர் கர்ப்பரட்சகாம்பிகை, மற்றம் திருச்சியிலுள்ள குங்குமவல்லி சமேத தான்தோன்றீஸ்வரரை வணங்குதல் வேண்டும்... முன்னோர்களை வழிபட தவறியவர்களுக்கு ஏற்படும் தீவினைகளுக்கு ராமேஸ்வரம் சென்று ராமநாத சுவாமியை வழிபடலாம்.
ஜென்ம நட்சத்திரம்: இந்த கோவில்களில் உரிய காலங்களில் சென்று இறைவனை வழிபட்டு பரிகார பூஜைகள் செய்யும்போது, தோஷங்கள் நீங்கும்.. அதிலும், ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் பரிகார பூஜைகளை செய்வது கூடுதல் நன்மைகளை தரும் என்பார்கள்.
அதேபோல, தோஷம் உள்ளவர்கள், தினமும் மாலை நேரம் வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்யலாம். பசுநெய் அல்லது நல்லெண்ணெய் தீபத்தை ஏற்றி வைத்து, கோலம் போட்ட இடத்தின் மீது விளக்கு வைக்க வேண்டும்.. காரணம், புள்ளிக்கோலத்திற்கு உறவுகளை இணைக்கும் ஆற்றல் உண்டு என்பதால், இதன்மீது விளக்கு வைக்கப்படுகிறது.
பூரண கும்பம்: கற்பக விநாயகர் படத்தை வடக்கு பார்த்தும், குரு பகவான் படத்தை நம்மைப் பார்க்கும் விதம் வைத்து வழிபடுவதும் சிறப்புக்குரியதாகும்.. பூரண கும்பத்தின் முகத்தில் அதிகாலையில் விழித்தால், லட்சுமி கடாட்சம் உருவாகும். நிலைக்கண்ணாடியை வீட்டின் முகப்பில் வைத்தால், திருஷ்டி தோஷம் விலகும்.












Click it and Unblock the Notifications