ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மீக பயணம்! தமிழக அரசின் அசத்தல் அறிவிப்பு! எப்படி விண்ணப்பிப்பது?
சென்னை: ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணமாக 1000 பேரை அழைத்துச் செல்ல இந்து சமய அறநிலையத்துறை திட்டமிட்டுள்ள நிலையில், இதற்கான தகுதிகள் என்னென்ன?விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தமிழக முதலமைச்சராக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் பல நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான கோவில்களில் கும்பாபிஷேக பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

மேலும், சிவராத்திரி, அமாவாசை உள்ளிட்ட தினங்களில் புகழ்பெற்ற கோவில்களில் இரவு நேரங்களில் பல நிகழ்ச்சிகளும், ஆன்மீக சொற்பொழிவுகள் தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.
இது போன்ற திட்டங்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் ஆடி தெய்வங்களுக்கான மாதமாகக் கருதப்படுகிறது. ஆடிப் பிறப்பிலிருந்து ஆடி இறுதி வரை ஆடியின் ஒவ்வொரு நாளும் தெய்வீகச் சடங்குகள் அனுசரிக்கப்படுகின்றன. சாஸ்திரங்கள் இதை சக்தி வழிபாட்டுக்கான மாதம் என்கின்றன. ஆடி மாதம் முழுவதும் அம்மனுக்கான கொடைத் திருவிழாக்கள் கொடியேற்றத்துடன் தொடங்குகின்றன.
ஆடி மாதம் கிராம தேவதைகளுக்கான மாதம். ஆடி மாதம் கொடைத் திருவிழாவில் அம்மனைக் குளிர்வித்தால்தான் கிராமம் செழிக்கும் என்னும் நம்பிக்கையால் கிராமத் திருவிழாக்கள் பாட்டும் கச்சேரியுமாக வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. இத்திருவிழாவை ஒட்டிக் கூழ் ஊற்றும் சடங்கும் நடைபெறுகிறது. சென்னையில் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்கள் மட்டுமல்லாது தெருவெங்கும் உள்ள அம்மன் கோவில்களில் கூழ் ஊற்றி வழிபடும் நிகழ்ச்சிகளும் அதிகளவில் நடக்கும். மேலும் புகழ்பெற்ற அம்மன் ஆலயங்களுக்கு பக்தர்கள் ஆன்மீக பயணம் மேற்கொள்வர்.
இந்நிலையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு 1,000 மூத்த குடிமக்களை கட்டணமில்லா ஆன்மிக பயணம் அழைத்துச் செல்ல தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி மதுரை, திருச்சி, நெல்லை, சென்னை, தஞ்சாவூர் ஆகிய மண்டலங்களை தலைமையிடமாகக் கொண்டு, 1,000 மூத்த குடிமக்கள் அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
ஆடி மாத ஆன்மிக பயணம் 4 கட்டங்களாக, வரும் 19ம் தேதி, 26ம் தேதி மற்றும் ஆகஸ்ட் 2ம் தேதி, 9ம் தேதிகளில் தொடங்குகிறது. இதில், 60 முதல் 70 வயதுக்குட்பட்ட மூத்த குடிமக்கள் வரும் 17ம் தேதிக்குள் விண்ணப்பித்து வாய்ப்பு பெறலாம். பக்தர்கள் இந்து மதத்தைச் சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவர் என்பதை உறுதிப்படுத்த வயது சான்றிதழ் இணைக்க வேண்டும். போதிய உடல் தகுதி இருத்தல் வேண்டும். தற்போது வசிக்கும் வீட்டின் நிலையான முகவரிக்கான ஆதாரத்தை இணைக்க வேண்டும்.
சிறு குழந்தைகளை அழைத்துவர அனுமதியில்லை. ஆதார் கார்டு அல்லது பான்கார்டு இணைக்கப்பட வேண்டும். விண்ணப்பங்களை அறநிலையத் துறை இணை கமிஷனர், உதவி கமிஷனர், ஆய்வாளர், கோயில் அலுவலகங்களில் பெற்றுக் கொள்ளலாம். விண்ணப்பங்களை, இந்து சமய அறநிலையத் துறை வலைதளம் hrce.tn.gov.in, வாயிலாக பதிவிறக்கம் செய்தும் கொள்ளலாம். விண்ணப்பத்துடன், ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் வருமான சான்று பெற்று இணைக்க வேண்டும். பக்தர்கள் ஒரு முறை மட்டுமே, இப்பயணத்தில் பங்கேற்க முடியும்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு தகுதிகள் என்னென்ன?விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து தமிழக இந்து சமய அறநிலையத்துறை சார்பில் மூத்த குடிமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். இதுகுறித்து பேசிய அதிகாரிகள்," ஆடி மாதத்தில் கட்டணமில்லாமல் ஆன்மிக பயணம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுதொடர்பாக பொதுமக்கள் தெரிந்து கொள்ளும் வகையில், கோயில்களில் தகவல்கள் பிளக்ஸ் வைக்கப்பட்டு உள்ளன. மேலும் கோயிலுக்கு வருவோரிடம் இத்திட்டம் குறித்து விளக்கி விழிப்புணர்வு செய்யப்பட்டு வருகிறது.
-
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
29 + 9.. அதிமுக கூட்டணியில் பாஜக - அமமுகவுக்கு எத்தனை சீட்? இறங்கி வராத எடப்பாடி பழனிச்சாமி -
உலக நாடுகளுக்கே மிகப்பெரிய ஆபத்து.. நிலைமை கையை மீறி போகுது.. ரஷ்யா புதின் தந்த 'ஷாக்' வார்னிங் -
"நீங்கள் ஸ்டாலினை சீண்டி இருக்கலாம்.. ஆனால் என்னிடம் வேண்டாம்.!" ஆளுநர் ரவிக்கு மம்தா எச்சரிக்கை -
பவன் கல்யாண் போட்ட தூண்டில்.. நாமக்கல்லில் 70% எகிறும் விஜய் கிராஃப்.. திமுகவுக்கு 4 பக்கம் ஆபத்து? -
எடப்பாடியை முதல்வராக மோடி - அமித்ஷா அறிவிக்காதது ஏன்.. காரணம் இதுதான்.. உடைத்த பிரபலம் -
விசிக 8, மதிமுக 4.. நாளைக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்கும் திமுக.. குறைந்த தொகுதிகளில் உதயசூரியன்! -
ஒரு குண்டு கூட வீசாமல்.. அமெரிக்காவை காலி செய்யும் சீனாவின் "ரகசிய" ஆயுதம்.. ஆட்டம் மொத்தமா மாறுது -
பச்சை, வெள்ளை, சர்க்கரை ரேஷன் அட்டையில் அரசு சலுகைகள்! 3 மாதம் பொருட்கள் வாங்காவிட்டால் கார்டு கட்? -
175 சீட் "மாஸ்டர் பீஸ்" தலைகீழாக போகுதே? கியரை மாற்றிய திமுக, அஇஅதிமுக.. லட்டு சான்ஸ் மிஸ் ஆகிறதே? -
நாடு முழுதும் ESMA அமல்.. கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால் மத்திய அரசு அதிரடி.. மீறினால் அவ்வளவுதான்












Click it and Unblock the Notifications