கழுத்தை நெரிக்கும் கடன் தொல்லை தீர.. பாசி பருப்பு போதுமே.. இதை மட்டும் செய்து பாருங்க, பணம் சேரும்
சென்னை: கழுத்தை நெரிக்கும் கடனில் மூழ்கியிருப்பவர்களுக்கு எளிய பரிகாரம் ஒன்று சொல்லப்பட்டுள்ளது.. அளவுக்கு அதிகமாக கடன்பட்டவர்களும், தவணை கொடுக்க முடியாமல் தடுமாறுபவர்களும், இந்த எளிய பரிகாரத்தை எளிதாக செய்யலாம்.
கடன் பிரச்சினை தீர்க்க, பாசிபருப்பு போதும் என்கிறார்கள்.. இந்த பாசிபருப்பில் பரிகாரங்களை செய்வதால், அதன் பலனை விரைவில் காண முடியும்.. இதற்கு சிறுபருப்பு எனப்படும் பாசி பருப்பை வாங்கி வைத்து, இரவில் தூங்க செல்வதற்கு முன்பு ஊற வைக்க வேண்டும்..

பாசிப்பருப்பு முக்கியம்
1 கைப்பிடி பாசிப்பருப்பு, 1 கைப்பிடி வெல்லம் அல்லது நாட்டு சர்க்கரை கலந்து ஒரு கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி ஊற வைத்தால் போதும்.. மறுநாள் காலை இந்த பாசி பருப்பை கொண்டு போய் அப்படியே பசு மாட்டிற்கு, உங்கள் கையாலேயே உண்ண கொடுக்க வேண்டும். அப்படி கொடுக்குபோது, உங்களது கடன் பிரச்சனையும் தீர வேண்டும் என்று கோமாதாவிடம் வேண்டி கொள்ள வேண்டும்.
உங்கள் கையால் எந்த அளவுக்கு பாசிப்பருப்பு, வெல்லத்தை தருகிறீர்களோ, அந்த அளவுக்கு வறுமை நீங்கி செல்வம் தேடி வரும்.. அதேபோல, ஒரு கைப்பிடி பச்சரிசியை இரவு ஊற வைத்து காலையில் சர்க்கரை, வாழைப்பழம் கலந்தும் பசுவிற்கு தரலாம்.. இதன்மூலம் எளிதில் கடனை அடைக்க முடியும்.
சிறுபருப்பு பாயாசம்
அதேபோல, புதன்கிழமைகளில் பாசிப்பருப்பு வாங்கி கோவிலில் குருக்களுக்கு தானம் கொடுக்கலாம்.. ஆதரவற்றவர்கள் வாழும் ஆசிரமங்களுக்கும், ஏழை குடும்பத்திற்கும் தானம் கொடுக்கலாம்.. இதை வாங்குபவர்கள் சமைத்து சாப்பிடும்போது, உங்களது நிதி நெருக்கடி விரைவில் தீரும். சிறுபருப்பை தானம் செய்ய, செய்ய, அந்த அளவுக்கு உங்களது கஷ்டங்கள் தீரும்.
பாசிப்பருப்பு வறுமை தீர்க்கும்
அதேபோல, கோவிலில் பிரதோஷ நேரத்தில் பாசிப்பருப்பு பாயாசம் செய்து ஏழைகளுக்கு உங்கள் கையாலாயே சாப்பிட தரலாம்.. அல்லது ஆசிரமங்களுக்கு பாசி பருப்பு பாயாசம் செயது கொண்டுபோய் உங்கள் கையாலேயே பரிமாறிவிட்டு வரலாம்.. வறுத்த பாசிப்பருப்பை காக்கை குருவிகளுக்கும் இரையாக சாப்பிட தரலாம். பாசிப்பருப்பு தானம் என்பது, வீட்டிலுள்ள பணக்கஷ்டம் மட்டுமின்றி, மன கஷ்டங்களையும் தீர்க்கும்..
வியாழக்கிழமைதோறும் உங்களது வீட்டில் பாசி பருப்பு பாயாசத்தை செய்ய வேண்டும். இதனை பூஜை அறையிலுள்ள தெய்வத்திற்கு நிவேதனமாக படைக்க வேண்டும். பிறகு, தேங்காய் எண்ணெயில் வாழைத்தண்டு திரியினை போட்டு தீபமேற்றி வழிபட வேண்டும். இதனை வாரந்தோறும் வியாழக்கிழமைகளில் தொடர்ச்சியாக செய்து வந்தாலே, மகிழ்ச்சியும் நிம்மதியும் கிடைக்கும் என்பார்கள்.
-
வைகாசி விசாகம் 2026: எப்படி விரதம் இருந்தால் முருகனின் அருளை பெற முடியும்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications