Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஓயாத கண்திருஷ்டி...ஒழியாத சண்டை..இந்த பரிகாரம் பண்ணுங்க பாசிட்டிவ் எனர்ஜி அதிகரிக்கும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தீயசக்திகளால் ஏற்படும் பாதிப்பு மனதை சஞ்சலப்படுத்தும். வீட்டிற்குள் இருப்பவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்படும்

"கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது" என்று பெரியவர்கள் கூறியுள்ளனர். கண் திருஷ்டி கோளாறு இருந்தாலே வீட்டில் உள்ளவர்களுக்கு ஒருவர் மாற்றி ஒருவருக்கு உடல்நல கோளாறுகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

ஒரு வீட்டில் எதிர்மறை அதிர்வுகள் இருந்தால், அந்த வீட்டின் மனசஞ்சலங்கள் அதிகரிக்கும். சிலர் காலையில் நன்றாக இருப்பார்கள். ஆனால் மாலையில் உடலுக்கு என்னவென்றே சொல்லமுடியாத நிலை ஏற்படும். செய்யும் தொழில் வியாபாரத்தில் எந்த முன்னேற்றமும் இல்லாமல் இருக்கும். கல்யாணம் மற்றும் சுப நிகழ்வுகள் வீட்டில் நடக்காமல் தள்ளிப் போய்க்கொண்டே இருக்கும்.

ஒருவரின் வாழ்க்கையில் எந்த பிடிப்பும் இல்லாமல் இருப்பது அதாவது ஏதோ வேலைக்கு போகிறோம் வருகிறோம் என்று இருப்பது வாழ்க்கையே உப்பு சப்பில்லாமல் இருக்கும். சங்கடங்கள் நீங்கி சந்தோஷங்கள் ஏற்படுத்த சில பரிகாரங்களை செய்ய வேண்டும். கண் திருஷ்டியால் வரும் நோய் பாதிப்பு நீங்க எளிமையான பரிகாரம் பண்ணலாம். எளிமையான இந்த பரிகாரம் செய்வதன் மூலம் சண்டை சச்சரவுகள் நீங்கும் தீய சக்திகளின் பார்வைகள் நீங்கி நல்ல நேர்மறையான சக்திகள் வீட்டிற்குள் அதிகரிக்கும்.

வெண்கடுகு

வெண்கடுகு

வெண் கடுகு சாமான்யமான பொருள் அல்ல. அது கடவுள் தன்மையைக் கொண்டது. அது தேவ கணம் ஆகும்.
மகத நாட்டை ஆண்டு வந்த மயில்வண்ணன் என்ற மன்னன் பெரும் கொடையாளி. மக்களுக்கு நிறைய நன்மைகளை செய்து வந்தான். ஆகவே அவனது புகழ் எங்கும் பரவி இருந்தது. அவன் மீது பொறாமைக் கொண்ட விரோதிகள் அவன் மீது தீய ஏவல்களை ஏவி விட்டார்கள். அதனால் நாளடைவில் அவனால் எதையும் சரிவர யோசனை செய்ய முடியாமல் தத்தளித்தான். அவன் குடும்பத்திலும் அமைதி குலைந்தது. ஆகவே அவன் தனது ராஜ குருவை அழைத்து தன்னுடைய சங்கடங்களைக் கூறி அதற்குப் பரிகாரம் கேட்டான். ராஜகுருவும் அவனுக்கு ஒரு விசேஷ பூஜையை செய்யுமாறு அறிவுரை செய்தார். அதன்படி ஒரு மண்டலம் பைரவப் பெருமானுக்கு வெண்கடுகு, இலாமச்சம்வேர், சந்தனம், அறுகு என்னும் நான்கையும் கொண்டு பாத பூஜை செய்தப் பின் சாம்பிராணியை தூபத்தை ஏற்றி வைத்து அதன் தூபத்தில் வெண் கடுகைப் போட்டு வீடு முழுவதும் அந்தப் புகையைக் காட்டினால் தீய சக்திகள் ஓடிவிடும் என்றும் கூறினார்.

குடும்பத்தில் அமைதி

குடும்பத்தில் அமைதி

தனது ராஜ குரு கூறியதைப் போலவே மன்னன் மயில்வண்ணன் வெண் கடுகைப் போட்டு பூஜையும், யாகமும் செய்ய அனைத்து தீய ஆவிகளும் வீட்டை விட்டு வெளியேறின. அவர் குடும்பத்தில் மீண்டும் அமைதி ஏற்பட்டது. நெருப்பில் வெண்கடுகு போட்டு வெடிக்கும் போது வீட்டில் இருக்கும் துஷ்ட தேவதைகள் அனைத்தும் தலை தெரிக்க ஓடுவதாக கூறப்படுகிறது. மேலும் இதனுடன் நீங்கள் மருதாணி விதையை சேர்த்து தூபம் போட்டால் கூடுதல் நன்மைகளை அடையலாம்.

மருதாணி விதைகள்

மருதாணி விதைகள்

மருதாணி விதைகளில் மகாலட்சுமி நிறைந்திருக்கிறாள். உங்களுடைய தொழில் வளர்ச்சி அதிகரிக்க தூபம் போடும் பொழுது சிறிதளவு மருதாணி விதையை பொடித்து போட வேண்டும். அதனுடன் வெண்கடுகும் சேர்த்து தூபம் போட தீய சக்திகள், கண் திருஷ்டிகள், கடுமையான தோஷங்கள் எல்லாமே ஒரே அடியாக நீங்கி தடைபட்ட வளர்ச்சி மீண்டும் முன்னெடுக்க துவங்கும். இதனால் லாபம் அதிகரிக்கும். பொருளாதார முன்னேற்றம் அடையும். மகாலட்சுமி நம்மிடம் தங்குவதற்கு ஆசைப்படுவாள். எனவே இனி வாரம் ஒருமுறை மருதாணி விதை போட்டு தூபம் ஏற்ற மறக்காதீர்கள். குறிப்பாக வீடுகளில் மருதாணி விதையை போட்டு தூபம் ஏற்றுவதை விட, வியாபாரம் செய்யும் இடங்கள், தொழில் ஸ்தாபனங்கள், பெரிய பெரிய தொழில் கூடங்கள் போன்றவற்றில் இது போல செய்வதன் மூலம் நல்லதொரு வளர்ச்சியை அடைய முடியும்.

 மூலிகை பொடி தூபம்

மூலிகை பொடி தூபம்

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் நிம்மதி இல்லையா? நிம்மதிக்குறைவா? சதா சர்வ காலமும் எந்த வித காரணமின்றி சச்சரவுகள், படுத்தால் அமைதியான தூக்கமின்மை, தம்பதியினருக்கு மத்தியில் வாக்குவாதங்கள், சுப காரியங்கள் தடையா? கண் திருஷ்டி, எதிர் மறை சக்திகள் போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் உடனடி சர்வ ரோக நிவாரணியாக செயல்படுவது மூலிகை சாம்பிராணி தூபம். செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், கண்திருஷ்டி மற்றும் பிற தீயசக்திகளும், எதிர்மறை சக்திகளும் அழிந்தோட ஒரு எளிய முறை உண்டு.

தீய சக்திகள் அழியும்

தீய சக்திகள் அழியும்

வெண்கடுகு, நாய்க்கடுகு, மருதாணி விதை, சாம்பிராணி,அருகம்புல் பொடி,வில்வ இலை பொடி, வேப்ப சமூலம், நொச்சி சமூலப்பொடி,குங்கிலியம்,தேவதாறு ஆகிய தெய்வீக ஆற்றல் உள்ள பொருட்கள் கால்களில் பட கூடாது. இரண்டு மூன்று நாட்களிலேயே இதன் சக்தியை உணரலாம். வெண்கடுகு மற்றும் நாய்க்கடுகு இரண்டும் பைரவருக்குடையது. மருதாணி விதை திருமகளுக்குரியது. அறுகம்புல் விநாயகரின் மூலிகை ஆகும். வில்வம் சிவனுக்கும் வேம்பு அம்மனின் சக்தி இவர்களுக்குரியது. மேற்கண்டவற்றை நெருப்பில் தூவும் போது பைரவ, சிவ கணங்கள் மற்றும் சக்தியின் கணங்கள் தோன்றி தீய சக்திகளை அழிப்பார்கள். எனவே இந்த பொருட்களை தினசரி மாலையிலோ ,காலையிலோ தொடர்ந்து 48 நாட்கள் தூபம் போட்டு வர அனைத்து எதிர் மறை சக்திகளும் விலகும்.
குடும்பத்தில் அமைதி உண்டாகும். குடும்பத்தின் உறுப்பினர்களிடையே ஒற்றுமை உண்டாகும். லட்சுமி கடாட்சம் உண்டாகும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+